»   »  கட்டுனா இவரைத் தான் கட்டுவேன்: ஒத்தக் காலில் நிற்கும் அனுஷ்கா

கட்டுனா இவரைத் தான் கட்டுவேன்: ஒத்தக் காலில் நிற்கும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஷ்கா ஏற்கனவே திருமணமான டோலிவுட் இயக்குனரை காதலிப்பதுடன் அவரையே மணக்க முடிவு செய்துள்ளாராம்.

நடிகை அனுஷ்காவுக்கு 34 வயதாகுகிறது. அவரது பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரோ படங்களில் பிசியாக உள்ளார்.

தற்போது பாகுபலி 2 படத்திற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காதல்

காதல்

அனுஷ்காவுக்கும், தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையேயான காதல் பற்றி தான் கடந்த இரண்டு நாட்களாக டோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது. அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா ஹீரோயினாக நடித்த படம் ஒன்றை அந்த பெரிய தயாரிப்பாளர் தயாரித்தாராம். அதில் இருந்து நல்ல நண்பர்களாக இருந்தவர்களுக்கு இடையே காதல் வந்துவிட்டதாம்.

திருமணம்

திருமணம்

கட்டுனா இவரை தான் கட்டுவேன் என்று முடிவு செய்துள்ளாராம் அனுஷ்கா. அந்த தயாரிப்பாளரும் மனைவி இருக்க அனுஷ்காவை திருமணம் செய்ய தயாராக உள்ளாராம்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

முன்னதாக அனுஷ்காவுக்கும் சீனியர் தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு வாரிசு தெலுங்கு நடிகருடன் அனுஷ்காவின் பெயர் அடிபட்டது. இது தவிர இயக்குனர் ஒருவரின் பெயரும், அனுஷ்காவின் பெயரும் சேர்ந்து அடிபட்டது.

English summary
Buzz is that Anushka is in love with a married Tollywood producer and wants to marry him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil