டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு

ஹைதராபாத்: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகும், திறமையும் ஒருசேர கொண்ட அவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தேவசேனா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் தற்போது காதி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இது தவிர்த்து மலையாள படம் ஒன்றிலும் நடிக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவரைப் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

Anushka Will Enter in the Andhra Politics Here are the full details

பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.

குறைந்த வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

செகண்ட் இன்னிங்ஸ்: இந்தச் சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த வருடம் வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்கா உற்சாகமாக இருக்கிறார்.

மலையாளத்தில் அறிமுகம்:தற்போது அவர் மலையாளத்திலும் அறிமுகமாகிறார். அந்தப் படத்தை ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கவிருக்கிறார். படத்துக்கு காத்தனார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரபுதேவாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா அடியெடுத்து வைப்பதால் அங்கும் தேவசேனா தனது ஆட்சியை செய்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இதற்கிடையே GOAT படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அனுஷ்காவிடம் அப்ரோச் சென்றதாகவும் அதனை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வானம் படத்தின் இயக்குநர் கிரிஷ் இயக்கத்திலும் காதி என்ற படத்தில் நடிக்கிறார்.

அரசியலுக்கு வருகிறாரா?; இந்நிலையில் அனுஷ்கா பற்றிய புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது மலையாள படம் மற்றும் காதி ஆகிய இரண்டு படங்களை தவிர்த்து வேறு எதுவும் படம் இல்லாததால் அவர் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்றும்; ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இயங்கிவரும் அரசியல் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவிருக்கிறார் என்றும் தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X