அனுஷ்கா நடித்திருக்கும் காதி திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஹைதராபாத்: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகும், திறமையும் ஒருசேர கொண்ட அவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தேவசேனா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் மூல ரீ என்ட்ரி கொடுத்த அவர் தற்போது காதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை வானம் படத்தை இயக்கிய க்ரிஷ் இப்படத்தை இயக்கியிருக்கும் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.

Anushka s film Ghaati to release in June or July

அனுஷ்காவுக்கு திடீரென குறைந்த வாய்ப்பு: செம ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு வர் உழைத்திருந்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்த அனுஷ்கா: இந்தச் சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த 2023ஆம் வருடம் வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருந்தது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்காவுக்கு நல்ல பெயர் கிடைத்ததால் அவரும் உற்சாகத்தோடு காணப்படுகிறார்.

காதி அனுஷ்கா: மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா அடுத்ததாக காதி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே அனுஷ்காவை வைத்து வானம் படத்தை இயக்கிய க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தக் கூட்டணி ஏற்கனவே வெற்றி கூட்டணி என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

எப்போது ரிலீஸ்?: முதலில் இப்படமானது இந்த வருடம் ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் அப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜூன் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X