»   »  கிளாமர் குஸ்கா அனுஷ்கா!

கிளாமர் குஸ்கா அனுஷ்கா!

Subscribe to Oneindia Tamil
மதமதவென ஆந்திராவிலிருந்து வந்து இறங்கியுள்ளார் அனுஷ்கா.

அலேக் அனுஷ்கா நடிக்கப் போகும் படம் வட்டாரம். தெலுங்கு திரையுலகை தனதுகிளாமர் கில்லியால் கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவை தமிழுக்குஇழுத்து வருவது சரண்.

சரணின் சொந்த நிறுவனமான ஜெமினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சரணேஇயக்கி தயாரிக்கும் வட்டாரம் படம் மூலம் தமிழையும் தனது கவர்ச்சியால்தளுதளுக்க வைக்கப் போகிறார் அனுஷ்கா.

இப்படத்தின் ஹீரோ ஆர்யா. முதலில் வட்டாரத்தை ஒத்துக் கொண்டு விட்டு பின்னர்பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக சரணுக்கு டேக்கா கொடுக்கமுயற்சித்தார் ஆர்யா.

ஆனால் சரண் கிடுக்கிப் பிடி போட்டு நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும்புகார் கொடுத்து விட்டார்.

இதையடுத்து ஆர்யாவைக் கூப்பிட்டு பஞ்சாயத்து செய்த நடிகர் சங்கம் ஒப்புக்கொண்டபடி வட்டாரத்தை முடித்து விட்டுத்தான் பாலா படத்திற்குப் போக வேண்டும்என்று உத்தரவு போட்டு விட்டது.

தமிழில் வளர்ந்து வரும் நேரத்தில் பிரச்சனை செய்தால் ஒழித்துக் கட்டிவிடுவார்கள்என்று பயந்து போன ஜொள்ளு ராசா ஆர்யா, சரணிடம் சரண்டராகிவிட்டார்.

இதையடுத்து அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. ஹீரோ பிரச்சினை ஓய்ந்ததால்அனுஷ்காவை வேக வேகமாக புக் செய்து படப்பிடிப்புக்குப் போகிறார் சரண்.

முதலில் ஆர்யாவுக்கு ஜோடியாக காம்னா ஜெட்மலானியைத்தான் முடிவுசெய்திருந்தார் சரண். தனது முந்தைய படமான இதயத் திருடனில் காம்னா காட்டியகிளாமரால் கவரப்பட்ட சரண், இப்படத்திலும் அவரை வைத்து அசத்த முடிவுசெய்திருந்தார்.

ஆனால் அவரிடமிருந்து நடிப்பை எதிர்பார்க்க முடியாதே என்ற பயம் வந்து கடைசிநேரத்தில் காம்னாவுக்கு கல்தா கொடுத்து விட்டு அனுஷ்காவை அலேக் செய்து அள்ளிவந்து விட்டார்.

அனுஷ்காவுக்கு கிளாமர்னா தண்ணி பட்ட பாடாம். துள்ளி விளையாடி விடுவாராம்.அதேபோல நடிப்பிலும் அசத்துவாராம். இப்படி பலசரக்கு பாவையாகஇருப்பதால்தான் அனுஷ்காவை போட்டு விட்டார் சரண்.

Read more about: anuska in tamil film
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil