»   »  ஷிப்ட் ஆகும் அனுஷ்கா!

ஷிப்ட் ஆகும் அனுஷ்கா!

Subscribe to Oneindia Tamil

ரெண்டு படம் கெட்ட ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதால் அனுஷ்காவைத் தேடி நிறையஆஃபர்கள் குவியத் தொடங்கியுள்ளதாம். இதனால் சென்னையிலேயே செட்டிலாகிதமிழ் சினிமாவைக் கலக்க முடிவு செய்துள்ளார் அனுஷ்கா.

அல்வாத் துண்டு போல அழகாக இருக்கும் அனுஷ்கா, ஹைதராபாத்திலிருந்துசென்னைக்கு வந்தவர். அம்மணி வட்டாரம் படத்திலேயே நடித்திருக்க வேண்டியது.ஆனால் கொஞ்சம் போல பந்தா காட்டியதால் படத்திலிருந்து தூக்கி விட்டு கீரத்தைபோட்டு விட்டார் இயக்குநர் சரண்.

ஆனாலும் மனம் உடைந்து விடாமல் அனுஷ்கா முயன்றதால் ரெண்டு படத்தில்அனுஷ்காவுக்கு வாய்ப்பளித்தார் குஷ்பு ஆண்ட்டி. மாதவனுடன் ஜோடி போட்டுஇப்படத்தில் அசத்தினார் அனுஷ்கா.

அவரது நெளிவு சுளிவான ஆட்டம் பிளஸ் கிளாமர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அனுஷ்காவின் ஆட்டத்தை தியேட்டரில் ரசிகர்கள் விசிலடித்துரசிக்கிறார்களாம். படமும் சீரும், சிறப்புமாக ஓடிக் கொண்டிருப்பதால் அனுஷ்காவுக்குதிடீர் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

என் படத்தில் நடிங்க, என் படத்தில் நடிங்க என்று தயாரிப்பாளர்கள் அனுஷ்காவைநோக்கி கூவத் தொடங்கியுள்ளனராம். தமிழில் நிறைய வாய்ப்பு வருவதால்சந்தோஷமாகியுள்ள அனுஷ்கா, பேசாமல் சென்னையிலேயே தங்கி தொடர்ந்துதமிழ்ப் படத்தில் நடிக்கலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளாராம்.

அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தமிழிலிலும் அழகாக அவர் பேசுவதும்தமிழ்ப் பட வாய்ப்புகள் நிறைய வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம். ஸோ,சென்னையில் தங்கி நயனதாரா, அசின் உள்ளிட்ட நாயகிகளை ஒரு கை பார்க்கப்போகிறார் அனுஷ்கா.

இதேபோல இன்னொரு முன்னணி நடிகை சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குஷிப்ட் ஆகும் ஐடியாவில் இருக்கிறார். அவர், வல்லவனின் முன்னாள் தோஸ்த்நயனதாரா.

நயனதாராவுக்கு நிறைய தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகிறதாம். வல்லவன்பிடியிலிருந்து வெளி வந்து சுதந்திரப் பறவையாகி விட்டதால் போணி பண்ணசரியான நேரம் என்று தெலுங்குப் படத் தயா>ப்பாளர்கள் நயனதாராவை தங்களதுபடங்களில் புக் பண்ண ஆர்வம் காட்டுகின்றனராம்.

தமிழில் தொடர்ந்து நடிப்பேன் என்று நயனதாரா கூறி வந்தாலும் கூட ஹைதராபாத்தில்வீடு வாங்கி தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கவே ஆர்வமாக இருப்பதாககூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் ஹோட்டலில் தங்கி நடிக்க நயனதாரா பயப்படுகிறாராம். திரிஷாமேட்டர் போல தனக்கும் ஆகி விடுமோ என்ற பயம்தான் காரணமாம்.

அனுஷ்கா அங்கிருந்து இங்கு வருகிறார், நயனதாரா இங்கிருந்து அங்கு போய்சிலம்பப்போகிறார். ரசிகர்களுக்கு நல்ல வேட்டைதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil