‘சிங்கிளுக்கு’ மாறிய அனுயா!

By Sudha

Anuya
அனுயா சிங்கிள் டான்ஸ்களுக்கு மாறி விட்டார். அதாவது குத்துப் பாட்டுகளுக்கும் அவர் தயாராகி விட்டார்.

அத்தோடு நில்லாமல் தற்போது இரண்டு படங்களில் குத்தாட்டங்களில் கலக்கியுள்ளாராம் அனுயா.

சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து அறிமுகமானவர் அனுயா. முதல் படம் நன்றாகப் போனாலும் கூட அனுயாவுக்கு பெரிய ரேஞ்சுக்க மார்க்கெட் வந்து விடவில்லை. மதுரை சம்பவம் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் கலக்கியிருந்தார். அதன் பிறகும் கூட அவர் எதிர்பார்த்த அளவுக்கு மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை.

ஹீரோயின் வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போன அனுயா இப்போது குத்துப் பாட்டுகளுக்கும் தயாராகி விட்டார். தனது நண்பரான நடிகர் -இசையமைப்பாளர் ராகவ் கேட்டுக் கொண்டதால் நஞ்சுபுரம் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடினார்.

இதையடுத்து தற்போது சுந்தர். சி. கேட்டுக் கொண்டதால் அவரது தலைநகரம் படத்தின் 2வது பாகமான நகரம் படத்திலும் குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம்.

இந்தப் படங்கள் வெளிவந்து தனது ஆட்டம் ரசிக்கப்பட்டால் தொடர்ந்து குத்துப் பாட்டுகளுக்கு ஆடுவாராம். இல்லாவிட்டால் மீண்டும் ஹீரோயின் வாய்ப்புகளுக்காக முட்டி மோதப் போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X