இதுதான் கடைசி.. நடிகை விஜயலட்சுமியை அப்செட் செய்த முதலமைச்சர் விஜய்.. புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற சி.ஜோசப் விஜய்; நாகரீக அரசியலை தொடரும் விதமாக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மெஜாரிட்டியை பிடிக்க முடியாத விஜய்; திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராகியிருக்கிறார். நேற்றிலிருந்து தனது பணிகளை தொடங்கிய அவர்; தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்ற கேள்வி எல்லோரிடமும் இருந்தது. முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அரசியல் நாகரீகத்தை இவரும் தொடர்வாரா என்றும் பலர் குரல் எழுப்பினார்கள்.

Anyone Who Meets My Enemy Is My Enemy Vijayalakshmi Reacts After CM C Joseph Vijay Meets Seeman
Photo Credit:

செய்து காட்டிய விஜய்: அவர் அதனை செய்து காட்டிவிட்டார். பதவியேற்றதும் நேராக சென்று ஆசிரியர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் திட்டியே அரசியல் செய்த விஜய்; நேற்று அவரை நேரில் சந்தித்தது அனைவருக்கும ஆச்சரியத்தை கொடுத்தது. அதேபோல் தன்னை திட்டி வளர்ந்த விஜய்யை கை பிடித்து ஸ்டாலின் அழைத்து சென்றதும் நாகரீக அரசியலின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

Also Read
பேரறிஞர் அண்ணா மாதிரி.. Hats Off ஆஃப் முதலமைச்சர் விஜய்.. முதல் ஹிட் கொடுத்த விக்ரமன் பெருமிதம்
பேரறிஞர் அண்ணா மாதிரி.. Hats Off ஆஃப் முதலமைச்சர் விஜய்.. முதல் ஹிட் கொடுத்த விக்ரமன் பெருமிதம்

விஜயலட்சுமி வீடியோ: இந்நிலையில் விஜய் நேற்று சீமானை சந்தித்தது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி. அவர் அந்த வீடியோவில், "வணக்கம் மக்களே. முதலமைச்சர் விஜய் சில அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தார். நீங்கள் விஜய்க்கு சப்போர்ட்டே இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எதிரியை (சீமான்) சந்தித்திருக்கிறாரே என்று பலர் கேட்கிறார்கள். ஸ்டாலின் சார் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவரை, வைகோவை சந்தித்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஆனால் ஒரு அரசியல்வாதி வீட்டுக்கு அவர் சென்றதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இதுதான் கடைசி: முதலமைச்சர் விஜய் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; அது அவர்களுடைய விருப்பம், முடிவு. பரப்புரையில் திட்டிக்கொண்டு பிறகு போய் கட்டிப்பிடிப்பது எல்லாம் மக்களுக்கு ரொம்பவே குழம்பும். என் அக்காவையும், என்னையும் காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டில் வாழ விடுங்கள் என எத்தனையோ வீடியோக்களை போட்டிருக்கிறேன். மாறாக அனைவருமே அந்த அரசியல்வாதியை சந்தித்து சப்போர்ட் செய்கிறார்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மக்களுக்கு நன்றி. என்னை கொச்சைப்படுத்தியவர்களுக்கு நீங்கள்தான் பாடம் புகட்டினீர்கள். இதுதான் கடைசி வீடியோ. இனிமேல் வாழ்வோ சாவோ கர்நாடகாவில் பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய எதிரியை ஒருவர் சந்தித்தால் அவரும் எனக்கு எதிரிதான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X