‘சூரரைப்போற்று நாயகி ..அபர்ணா பாலமுரளி பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார் !

திரிச்சூர் : சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் 8 தோட்டாக்கள் மற்றும் சர்வம் தாள மயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சூரரைப்போற்று திரைப்படத்தில் இவரை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று தனது 25வது பிறந்தநாளை வீட்டில் இருந்தபடியே வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ தகவல்கள்

அதிகாரப்பூர்வ தகவல்கள்

கோலிவுட்டில் இப்பொழுது காரசாரமான பேச்சாக வலம் வந்து கொண்டிருப்பது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீஸ் பற்றியே. இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகிறது என சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது.

8 தோட்டாக்கள்

8 தோட்டாக்கள்

நடிகை அபர்ணா பாலமுரளி ஏற்கனவே மலையாளத்தில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்த நிலையில் தமிழில் 8 தோட்டாக்கள் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாள மயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார்.

சண்டே ஹாலிடே

சண்டே ஹாலிடே

மலையாள இசையமைப்பாளர் பாலமுரளியின் மகளான இவர் மலையாளத்தில் "யாத்ரா துடருன்னு" என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். இதைதொடர்ந்து மலையாளத்தில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற அபர்ணா பாலமுரளி மகேஷிண்டே ப்ரதிகாரம் மற்றும் சண்டே ஹாலிடே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

மன்னிப்பாயா என கேட்காதே

மன்னிப்பாயா என கேட்காதே

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இருந்து வரும் அபர்ணா மலையாளத்தில் பல பாடல்களை பாடியுள்ளதையடுத்து தமிழில் இவர் நடித்த 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் "மன்னிப்பாயா என கேட்காதே" என்ற பாடலை பாடியுள்ளார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

நடிகையாகவும் பாடகியாகவும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் அபர்ணா பாலமுரளி இப்பொழுது சூர்யாவின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

 25 வது பிறந்தநாள்

25 வது பிறந்தநாள்

இவ்வாறு சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வெற்றிக் கொடியை நாட்ட காத்துக்கொண்டிருக்கும் அபர்ணா பாலமுரளி செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று தனது 25 வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X