சூரரைப் போற்று வாய்ப்பு சும்மா கிடைக்கல.. பொம்மி பேக்கரி ஓனர் அபர்ணா பாலமுரளி ஓப்பன் டாக்!

சென்னை: சூர்யா, ஊர்வசி மற்றும் அபர்ணா பாலமுரளி இந்த மூன்று பேர் பற்றித் தான் இப்போ பட்டித் தொட்டி எங்கும் பேச்சு..

Recommended Video

சூரரைப்போற்று படத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஒரு பார்வை | Detailed Analysis

இயக்குநர் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் அந்த அளவுக்கு தங்கள் நடிப்பை நடிப்புன்னே தெரியாமல் நடித்து வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர்.

சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து அபர்ணா பாலமுரளி பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

இப்படி ஒரு மனைவி கிடைச்சா

இப்படி ஒரு மனைவி கிடைச்சா

ஏகப்பட்ட இளைஞர்களின் கனவே, இப்படி ஒரு மனைவி கிடைக்காதா என்று தான். கணவனின் கனவை அடைய உந்து சக்தியாகவும் அவன் துவளும் நேரத்தில் சாய்ந்து கொள்ள தாய் மடியாய், கோபித்துக் கொண்டாலும், இது தான் என் வீடு, வேற எங்கடா போவேன் மாறா என பேசும் காட்சிகளில் அபர்ணா பாலமுரளி ஒரு கனவு மனைவியாக உயர பறக்கிறார்.

யாரு பொம்மி?

யாரு பொம்மி?

சும்மா கல்யாணம் பண்ணோம், குழந்தை பெத்துக்கிட்டோம் என இருக்காமல், பெண்கள் தாங்களும் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் முதல் புருஷனான லட்சியத்தை கை விடக் கூடாது என்றும் இயக்குநர் சுதா கொங்கரா, தன்னுடைய கேரக்டரை அப்படியே பொம்மி கதாபாத்திரத்தில் இறக்கிய இடம் சூப்பர்.

எப்படித்தான் அமைகிறதோ

எப்படித்தான் அமைகிறதோ

சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் எத்தனையோ ஹீரோயின்களை சூர்யாவுக்கு ஜோடி ஆக்கி இருக்கலாம். ஆனால், சுதா கொங்கரா, அபர்ணா பாலமுரளியை ஹீரோயின் என அறிவித்ததும், ஏகப்பட்ட சூர்யா ரசிகர்களே அப்செட் ஆனார்கள். ஆனால், மாறாவுக்கு ஏற்ற பொம்மியை அவர் தேடிப் பிடித்துள்ளார் என்பதை சூரரைப் போற்று படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.

சான்ஸ் கிடைத்தது எப்படி

சான்ஸ் கிடைத்தது எப்படி

8 தோட்டாக்கள், ஜி.வி. பிரகாஷின் சர்வம் தாள மயம் என இரண்டு தமிழ் படங்களிலும், ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லையாம். அதற்காக ஏகப்பட்ட ஆடிஷன், மற்றும் பயிற்சி வகுப்புகள் என அனைத்து பரிசோதனைகளிலும் பாஸ் ஆன பிறகு தான் சுதா அவரை பொம்மியாக செலக்ட் பண்ணாராம்.

கிடைக்கிற வரைக்கும் விடமாட்டார்

கிடைக்கிற வரைக்கும் விடமாட்டார்

இயக்குநர் சுதா கொங்கராவின் மனதில் ஒவ்வொரு காட்சியும் ஓடிக் கொண்டே இருக்கும். ஷூட்டிங் போவதற்கு முன்பாகவே இந்த காட்சி இப்படித்தான் வர வேண்டும், இவர் இப்படித்தான் நடிக்க வேண்டும் என திட்டம் போட்டு வைத்திருப்பார். அந்த பர்ஃபக்‌ஷன் கிடைக்கிற வரைக்கும் விடமாட்டார் என அபர்ணா கூறியுள்ளார்.

டவுன் டு எர்த்

டவுன் டு எர்த்

ரொம்ப சிம்பிளா செட்டில் இருப்பார். அவரது ரேஞ்சுக்கான பந்தா ஒரு துளி கூட இருக்காது. சக நடிகர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை கொடுத்து நடிப்பார். ரொம்ப பொறுமைசாலி, இயக்குநரை அப்படி மதிப்பார். இந்த சீன் அவ்ளோ தான், இதை எடுத்துக்கோங்க என ஒரு இடத்தில் கூட அவர் ஒதுங்கியதில்லை என அபர்ணா கூறியுள்ளார். பொம்மியை இன்னும் பல அவதாரங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தம்

ஹாலிவுட் தரத்துக்கு சூரரைப் போற்று படத்தை எடுத்துள்ள சுதா கொங்கரா, சூர்யாவுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையே ஒரு சூப்பரான முத்தக் காட்சியை வைத்திருப்பார். அந்த இடத்தில் லிப் லாக் வைத்திருந்தால் கூட நல்லா இருந்திருக்கும். ஆனால், அதை விட கன்னத்தில் கொடுக்கும் முத்தம் வேற லெவல். மாற்றான் படத்திலும் சிஜி முத்தம் தான் சூர்யா கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X