அண்ணனை தொடர்ந்து தம்பிக்கு ஜோடியாகும் சூரரைப்போற்று பொம்மி!
சென்னை : நடிகர் சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி.
ஆடு ஜீவிதம் மற்றும் உலா உள்ளிட்ட மலையாள படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவர் தமிழில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்த நிலையில் முத்தையா கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க அபர்ணா பாலமுரளி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக
சமீபத்திய மலையாள வரவாக தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. நடித்த சில படங்களிலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறாசமீபத்திய மலையாள வரவாக தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. நடித்த சில படங்களிலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரமாதமாக நடித்து கைத்தட்டல்களை பெற்றிருந்தார். இறுதிச்சுற்று வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யாவின் கதாபாத்திரம் இதில் மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு இணையாக அபர்ணா பாலமுரளி பொம்மி கதாபாத்திரமும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதோடு இப்படி ஒரு பெண் வாழ்க்கையில் மனைவியாக கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என ரசிகர்களை சொல்ல வைத்தது இவரது கதாபாத்திரம். ர். அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரமாதமாக நடித்து கைத்தட்டல்களை பெற்றிருந்தார். இறுதிச்சுற்று வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யாவின் கதாபாத்திரம் இதில் மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு இணையாக அபர்ணா பாலமுரளி பொம்மி கதாபாத்திரமும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தோடு இப்படி ஒரு பெண் வாழ்க்கையில் மனைவியாக கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என ரசிகர்களை சொல்ல வைத்தது இவரது கதாபாத்திரம்.

நீண்ட காத்திருப்பு
நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் அபர்ணா பாலமுரளி தமிழ் சினிமாவிற்கு 8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமானவர் அதைத் தொடர்ந்து சர்வம் தாள மயம் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தீதும் நன்றும் என்ற படத்திலும் நடித்திருந்தார் இந்த திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அபர்ணா பாலமுரளி ஒரு சுற்று வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கதைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அபர்ணா பாலமுரளி இப்போது நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கொம்பன் கூட்டணி
ஏற்கனவே சூர்யாவுடன் இணைந்து நடித்த அபர்ணா பாலமுரளிக்கு ஜாக்பாட் அடித்தது போல அவரது தம்பி கார்த்தியுடன் நடிக்கும் வாய்ப்பு இப்பொழுது கிடைத்துள்ளது . கிராமத்து கதைகளை மண்வாசனையுடன் வீரத்துடனும் படங்களில் கூறிவரும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கொம்பனில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருந்தார். கோவை சரளா, ராஜ்கிரண், யோகிபாபு, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக அமையும் கார்த்திக்கு கிராமத்து கதைகள் என்றால் மேலும் வெற்றி பெற்று வந்தன. 2015-ல் கொம்பன் வெளியாகி கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது . வழக்கமாக புதுப்புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் கார்த்தி இப்பொழுது இயக்குனர் முத்தையா உடன் மீண்டும் இணைய உள்ளார்.

கார்த்திக்கு ஜோடியாக
முத்தையா, கார்த்தி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது . இந்நிலையில் அப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. கொம்பன் போன்றே கிராமத்து கதை களத்தில் இந்த திரைப்படமும் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்க அதைப் பற்றிய முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் கதா நாயகியாக மாறிய நடிகை அபர்ணா பாலமுரளி தான் இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூரரைப்போற்று வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Recommended Video

அப்ப அண்ணன் இப்போ தம்பி
முதலில் அண்ணனுடன் இணைந்து ஜோடியாக நடித்த அபர்ணாவுக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அதேபோல கார்த்தியுடன் இணையும் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. நடிகர் கார்த்தி இப்பொழுது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் பொன்னியின் செல்வன் மிக விரைவிலேயே பேக்கப் ஆக உள்ளது. இதையடுத்து பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சார்தார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் அதில் ஒரு வேடத்தில் வயதான தோற்றத்தில் வர உள்ளார் .


Click it and Unblock the Notifications











