வேற மாதிரி சம்பவம் ஆன் த வே... தளபதி பாடல் பத்தி அபர்ணா தாஸ் சொன்னத பாருங்க!

சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் இன்றைய தினம் வெளியாகவுள்ளது. இதையொட்டி சன் பிக்சர்ஸ் வெறித்தனமான ப்ரமோக்களை ரசிகர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது. போதாத குறைக்கு படத்தில் நடித்துள்ள அபர்ணா தாசும் இந்தப் பாடல் குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ள நிலையில படம் கோடைக் கொண்டாட்டமாக வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. படத்தின் சூட்டிங் உள்ளிட்டவை நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

20 கோடி வியூஸ்

20 கோடி வியூஸ்

படத்தின் முதல் பாடல் அரபிக்குத்து கடந்த பிப்ரவரியில் காதலர் தினக் கொண்டாட்டமாக வெளியானது. இந்தப் பாடல் வெளியாக தற்போது ஒரு மாதத்தை கடந்த நிலையில், யூடியூபில் இந்தப் பாடலின் வியூஸ் 20 கோடியை நெருங்கியுள்ளது. இதேபோல லைக்ஸ்களும் 5 மில்லியனை நெருங்கியுள்ளது.

 2வது பாடலின் ப்ரோமோ

2வது பாடலின் ப்ரோமோ

படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முடுக்கி விட்டுள்ளது. தற்போது இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோவும் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை ஜாலியோ ஜிம்கானா என்ற அந்தப் பாடல் ரிலீசாக உள்ளது.

பாடலை பாடிய விஜய்

பாடலை பாடிய விஜய்

அனிருத் இசையில் இந்தப் பாடலை பாடியுள்ளார் விஜய். இந்த ப்ரமோவில் உற்சாகமான விஜய்யை பார்க்க முடிந்தது. அவருடன் பூஜா ஹெக்டே, நெல்சன், அனிருத் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் ஆட்டம் போட்டுள்ளனர். மிகவும் அழகான ஸ்டைலான விஜய் இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இன்று மாலைக்காக காத்திருக்கின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தப் பாடலின் ப்ரோமோ வெளியான இரண்டு தினங்களில் 12 கோடி வியூஸ்களை கடந்துள்ளது. ஏற்கனவே முதல் பாடல் 20 கோடியை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை வெளியாகும் இரண்டாவது பாடலும் யூடியூபை தெறிக்க விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Vijay Fans Ask For Beast Update From Mohammad Shami | Filmibeat Tamil
வேற மாதிரி சம்பவம்

வேற மாதிரி சம்பவம்

இந்நிலையில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அபர்ணா தாஸ், தளபதி ரசிகர்களுக்கு ஏராளமான உற்சாகம் மற்றும் ஆச்சர்யங்கள் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் வேற மாதிரி சம்பவம் வந்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தளபதி ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X