மலையாள நடிகையினா சும்மாவா? ஸ்லீவ்லெஸ் உடையில் நச்சுனு போஸ் கொடுத்த அபர்ணா தாஸ்!
சென்னை: மலையாள நடிகை அபர்ணா தாஸ் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீல நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ஸ்டைலாகவும், அதே நேரத்தில் செம்ம க்யூட்டாகவும் போஸ் கொடுத்துள்ள அபர்ணாவின் இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாள திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அபர்ணா தாஸ், தமிழில் தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் குறுகிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரது அழகும் ஸ்கிரீன் பிரசன்ஸும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று பிஸியான நடிகையாக மாறினார்.
நடிகை அபர்ணா தாஸ்: சமீபத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்பொலை திருமணம் செய்து கொண்டார் அபர்ணா. கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினரும், திரையுலக நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமண புகைப்படங்களும் அப்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டன.

மலையாள நடிகையினா சும்மாவா?: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா, தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் மாடர்ன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். நீல நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ஸ்மைலுடன் பல்வேறு போஸ்களில் எடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன. மினிமல் மேக்கப், நேர்த்தியான ஹேர் ஸ்டைல் மற்றும் எளிமையான லுக்கை அவரை மேலும் அழகாக்கி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "பீஸ்ட் படத்தில வந்த அதே க்யூட் லுக் இன்னும் மாறல", "திருமணத்துக்குப் பிறகு இன்னும் அழகாகிட்டீங்க", "மலையாள நடிகையினா சும்மாவா" என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அபர்ணா தாஸின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications