ஹீரோயின்
தனுஷை வைத்து திருடா திருடி படத்தைத் தயாரித்து நல்ல வசூலால் மகிழ்ந்து போயுள்ள தயாரிப்பாளர்கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் அடுத்தபடம் தான் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்.
இதில் தனுசுக்கு ஜோடியாக சுத்தமான தமிழ்ப் பெண்ணை ஹூரோயினாக்கியுள்ளார்கள். திரிஷாவைத் தொடர்ந்துநீண்ட நாட்களுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தமிழில் ஹீரோயினாகியுள்ளார்.
திருடா திருடியின் ரிசல்ட் தெரிவதற்கு முன்பே தனுசிடம் இன்னொரு கால்ஷீட்டையும் வாங்கி வைத்துவிட்டார்கிருஷ்ணகாந்த். படம் நன்றாகப் போவதால் உடனடியாக புதுக்கோட்டையிலிருந்து சரவணன் சூட்டிங்கைத்தொடங்கிவிட்டார்.
இந்தப் படத்துக்கு முதலில் வழக்கம்போல் மும்பையிலும் ஆந்திராவிலும் போய் ஹீரோயினைத் தேடினர்கள்.ஆனால், யாரும் சரி வரவில்லை. இந் நிலையில் தான் சென்னை லயோலா கல்லூரியில் இறுதியாண்டு விஷூவல்கம்யூனிகேசன் படிக்கும் அபர்ணாவைப் பிடித்துப் போட்டுள்ளார்கள்.
கவர்ச்சி காட்ட அபர்ணா தயார் தான் என்றாலும், இதற்கென்றே எக்ஸ்குளூசிவாக தாரிகாவையும் புக் செய்துவைத்துள்ளார்கள்.
தனுஷ் பட நியதிப்படி கவர்ச்சியில் தாரிகா கலக்கி எடுப்பார் என்கிறார்கள்.
படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட உள்ளதாம்.
படத்தை இயக்குவது ஏப்ரல் மாதத்தில் படத்தை டைரக்ட் செய்த ஸ்டேன்லி. படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறதாம்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தனுசுக்குஇது நான்காவது படம்.
இப்போதே அவரது ஊதியம் பெரிய நோட்டு ஒன்னைத் தாண்டிவிட்டது. இந்தப் படமும்வென்றால் சம்பளம் மேலும் உயரும் என்கிறார்கள்.
இதனிடையே திருடா திருடியில் வரும் மன்மத ராசா.. மன்மத ராசா.. பாடலுக்கு தனுசும் சாயாசிங்கும் போட்டுள்ளஆட்டத்துக்கு பல இடங்களில் தியேட்டரே எழுந்து நின்று ஆடுகிறது.
பாடலை ஒன்றுமோர் காட்டச் சொல்லி தகராறுசெய்வதும், திரையைக் கிழிப்பதும் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதற்கிடையே தனுசுக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வலை வீசும் முயற்சிகளில் திரிஷா உள்ளிட்ட சிலநடிகைகள் தீவிரமாக இறங்கியுள்ளது தனிக் கதை.
ஆனால், தனது தந்தை டைரக்டர் கஸ்தூரிராஜா பக்கம் விரலைக்காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறாராம் தனுஷ்.


Click it and Unblock the Notifications











