»   »  சமத்துப் பொண்ணு அபர்ணா காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ரொம்ப சுகமான விஷயம் என்கிறார் கருப்பழகி அபர்ணா.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மூலம் அறிகமாகி அத்தோடு காணாமல் போனவர், லயோலா கல்லூரி தந்தகருப்புக் கட்டழகி அபர்ணா. படங்களில் நடிப்பதோடு, அந்தப் படத்திற்கான நிதியுதவியையும் அம்மணிசெய்கிறார் என்று முன்பு கிசுகிசுக்கப்பட்டது.ஆனால் பைனான்ஸ் செய்வது எனது வேலையல்ல, நடிப்பது மட்டுமே எனது வேலை என்று கூறுகிறார் அப்பு!

சமத்துப் பொண்ணு அபர்ணா காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ரொம்ப சுகமான விஷயம் என்கிறார் கருப்பழகி அபர்ணா.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மூலம் அறிகமாகி அத்தோடு காணாமல் போனவர், லயோலா கல்லூரி தந்தகருப்புக் கட்டழகி அபர்ணா. படங்களில் நடிப்பதோடு, அந்தப் படத்திற்கான நிதியுதவியையும் அம்மணிசெய்கிறார் என்று முன்பு கிசுகிசுக்கப்பட்டது.ஆனால் பைனான்ஸ் செய்வது எனது வேலையல்ல, நடிப்பது மட்டுமே எனது வேலை என்று கூறுகிறார் அப்பு!

Subscribe to Oneindia Tamil

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ரொம்ப சுகமான விஷயம் என்கிறார் கருப்பழகி அபர்ணா.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மூலம் அறிகமாகி அத்தோடு காணாமல் போனவர், லயோலா கல்லூரி தந்தகருப்புக் கட்டழகி அபர்ணா. படங்களில் நடிப்பதோடு, அந்தப் படத்திற்கான நிதியுதவியையும் அம்மணிசெய்கிறார் என்று முன்பு கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் பைனான்ஸ் செய்வது எனது வேலையல்ல, நடிப்பது மட்டுமே எனது வேலை என்று கூறுகிறார் அப்பு!


கருப்பாக இருந்தாலும் களையான அழகு, கும்மென்ற இளமை என பளிச்சாக இருப்பவர் அபர்ணா. இருந்தும்கூட அதிக அளவில் படங்கள் வரவில்லை அபர்ணாவுக்கு.

இதனால் மலையாளப் படங்களிலும் கிடைத்த சில கன்னடப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதுதமிழில் ஏபிசிடி என்ற படத்தில் ஸ்னேகா, நந்தானா ஆகியோருடன் மூன்றில் ஒரு ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

வாய்ப்புக்காக அவர் அலைவதும் இ"லலை காரணம், அம்மணி பல கோடிகளுக்கு அதிபதி. ஏகப்பட்டசொத்துக்கள், கல்வி நிலைங்கள் என குடும்பத்தில் துட்டுக்கு பஞ்சமில்லை.

இருந்தாலும் தமிழ் சினிமா தன்னை புறக்கணித்தற்காய் கொஞ்சம் வருத்தமும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான்செய்கிறதாம்.

என்ன ரொம்ப நாளாக தமிழ் பக்கமே காணவில்லை என்று அபர்ணாவை நோக்கி கேள்வி கொக்கியைப்போட்டபோது மனம் திறந்து பேசினார்.

அவர் சொன்னது:

கேரக்டர்களை செலக்ட் செய்து நடிக்கிறேன். இதனால் தான் அதிக படங்களில் என்னைப் பார்க்க முடியவில்லை.இப்போது ஏபிசிடி படத்தில் நடித்து வருகிறேன். ஷாம்தான் எனக்கு ஜோடி.

இந்தப் படம் தவிர சிபிராஜுடன் மாமு என்ற படமும் புக் ஆகியிருக்கிறது. அப்புறம் மலையாளத்துல ஒரு படம்.இப்படி பிசியாகத்தான் இருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் கை நிறையப் படங்கள் இருக்கிறது என்பதைவிட நல்ல கேரக்டர்களில் நிடிக்கிறோமோ, இல்லையா என்பதுதான் முக்கியம்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்திற்குப் பிறகு எனக்கு அதிக அளவில் படம் வரவில்லை என்பதற்காகநான் வருத்தப்படவில்லை. சரவணன் படத்தை நான் ரசித்து செய்தேன். அப்போது நான் விவரம் தெரியாதபொண்ணு, சினிமான்னாலே என்னன்னு தெரியாமத்தான் அதில் நடித்தேன். எனக்கு சாவித்திரி போல வரவேண்டும் என்று ஆசை என்றார்.


சரி, உங்க காதல் எல்லாம்ம் எப்படி போகிறது என்று நைசாக வாழைப்பழத்தில் ஊசியை செருகினோம்.

அய்யோ, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சார், உங்களுக்கு யார் இப்படி ஒரு தவறான தகவலை சொன்னது.எனது மனதில் இன்னும் யாரும் நுழையவில்லை. ஆனால் காதலுக்கு நான் எதிரி இல்லை. காதலிப்பதும்,காதலிக்கப்படுவதும் ரொம்ப அழகான விஷயம். அதெல்லாம் பாாக்கியம் செய்தவர்களுக்கு மட்டும்தான்வாய்க்கும் என்றார் பக்குவமாக.

சமத்துப் பொண்ணு!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil