அபர்ணாவுக்கு கை கொடுக்கும் சேரன்! கருப்பழகி அபர்ணாவுக்கு நல்லதொரு வாய்ப்பை இயக்குநர் சேரன் வழங்கியுள்ளார்.லயோலா கல்லூரி அழகியான அபர்ணா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் நடிகையானார். அப்படத்திற்கு கொஞ்சம் பைனான்ஸும் செய்தார்.முதல் படத்திலேயே அவரது கருப்பழகை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா.படம் ஊத்திக் கொண்டதால் அபர்ணாவின் பல ஆசைகள் நிராசையாகின. அடுத்தடுத்து படங்களும் வரவில்லை. அபர்ணாவும் அதற்காக பெரிய அளவில்கவலைப்படவில்லை. காரணம், அவரை அணுகும் பல தயாரிப்பாளர்கள், கூடவே பைனான்ஸ் செய்யவும் கோரியதால், பயந்து போய் அப்படிப்பட்ட வாய்ப்பேஎனக்கு வேணாம் என்று கூறி ஒதுங்கியிருந்தார்.இருந்தாலும் அவ்வப்போது சில வாய்ப்புகள் வரத்தான் செய்தன. அதில் மலையாளத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பால் அங்குரசிகர்களைக் கவர்ந்தார். பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் அபர்ணா சும்மா இல்லை, தனது நடனத் திறமையை சரியாக பயன்படுத்தி சில கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.இந்த நேரத்தில்தான் அவருக்கு ஏபிசிடி படத்தில் நடிக்கும் சான்ஸ் வந்தது. ஷரவண சுப்பையா இயக்கும் இப்படத்தில் சினேகா உள்ளிட்டோருடன் இணைந்துஷாமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அபர்ணா. இதில் அவரது வேடம், நல்ல பெயரை வாங்கித் தரும் என்று அபர்ணா ரொம்ப நம்பிக்கையுடன் உள்ளார்.அவரது நம்பிக்கைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் தனது பொக்கிஷம் படத்தில் அபர்ணாவுக்கு அட்டகாசமான வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம்இயக்குநர் சேரன். இதில் அபர்ணாவுக்கு அருமையான கேரக்டராம். பெரிய நடிகைகளுக்கு இணையாக இப்படத்தின் மூலம் அபர்ணாவும் பேசப்படுவார் என்றுகோலிவுட்டிலும் கூறுகிறார்கள்.இப்படி கைவசம் சில அருமையான வாய்ப்புகள் இருப்பதால் இதை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடும் உத்வேகத்தில் உற்சமாகநடித்துக் கொண்டுள்ளார் அபர்ணா.வாழ்க அபர்ணா, வளர்க அவரது கலைச்சேவை!
கருப்பழகி அபர்ணாவுக்கு நல்லதொரு வாய்ப்பை இயக்குநர் சேரன் வழங்கியுள்ளார்.
லயோலா கல்லூரி அழகியான அபர்ணா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் நடிகையானார். அப்படத்திற்கு கொஞ்சம் பைனான்ஸும் செய்தார்.முதல் படத்திலேயே அவரது கருப்பழகை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா.
படம் ஊத்திக் கொண்டதால் அபர்ணாவின் பல ஆசைகள் நிராசையாகின. அடுத்தடுத்து படங்களும் வரவில்லை. அபர்ணாவும் அதற்காக பெரிய அளவில்கவலைப்படவில்லை. காரணம், அவரை அணுகும் பல தயாரிப்பாளர்கள், கூடவே பைனான்ஸ் செய்யவும் கோரியதால், பயந்து போய் அப்படிப்பட்ட வாய்ப்பேஎனக்கு வேணாம் என்று கூறி ஒதுங்கியிருந்தார்.
இருந்தாலும் அவ்வப்போது சில வாய்ப்புகள் வரத்தான் செய்தன. அதில் மலையாளத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பால் அங்குரசிகர்களைக் கவர்ந்தார். பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் அபர்ணா சும்மா இல்லை, தனது நடனத் திறமையை சரியாக பயன்படுத்தி சில கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.
இந்த நேரத்தில்தான் அவருக்கு ஏபிசிடி படத்தில் நடிக்கும் சான்ஸ் வந்தது. ஷரவண சுப்பையா இயக்கும் இப்படத்தில் சினேகா உள்ளிட்டோருடன் இணைந்துஷாமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அபர்ணா. இதில் அவரது வேடம், நல்ல பெயரை வாங்கித் தரும் என்று அபர்ணா ரொம்ப நம்பிக்கையுடன் உள்ளார்.
அவரது நம்பிக்கைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் தனது பொக்கிஷம் படத்தில் அபர்ணாவுக்கு அட்டகாசமான வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம்இயக்குநர் சேரன். இதில் அபர்ணாவுக்கு அருமையான கேரக்டராம். பெரிய நடிகைகளுக்கு இணையாக இப்படத்தின் மூலம் அபர்ணாவும் பேசப்படுவார் என்றுகோலிவுட்டிலும் கூறுகிறார்கள்.
இப்படி கைவசம் சில அருமையான வாய்ப்புகள் இருப்பதால் இதை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடும் உத்வேகத்தில் உற்சமாகநடித்துக் கொண்டுள்ளார் அபர்ணா.
வாழ்க அபர்ணா, வளர்க அவரது கலைச்சேவை!


Click it and Unblock the Notifications