»   »  அபர்ணாவின் 4 படங்கள் அபர்ணாவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.புதுக்கோட்டையில் இருந்து சரவணனில் அறிமுகமான இந்த கருப்பு குதிரைக்கு அத்தோடு சான்ஸ் இல்லாமல் போனது. இதனால்மலையாளத்துக்குப் போனவரை வைத்து சிலர் தமிழில் பூஜை போட்டனர். ஆனால், எதுவுமே படமாக மாறவில்லை.இந் நிலையில் டகடகவென அடுத்தடுத்து புதிய படங்கள் புக் ஆகி, சூட்டிங்குகளும் தொடங்கிவிட்டன. இதனால் மெகாமகிழ்ச்சியில் இருக்கிறார் இந்த கருப்பு நிலா.சரவண சுப்பையா இயக்கத்தில் ஸ்னேகா ஹீரோயினாக நடித்து முடித்துள்ள ஏபிசிடியில் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார்அபர்ணா.இதைத் தவிர மா.மு. என்ற படத்திலும் சேரன் இயக்கும் பொக்கிஷம் படத்திலும் நடிக்கும் அபர்ணாவுக்கு இப்போது இன்னொருபடமும் தானாகவே தேடி வந்துவிட்டது.ஆகாஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பிரியா நாயர் என்ற பெண் புரடியூசர் தயாரிக்கும் நண்பனின் காதலி என்ற படத்தில்அபர்ணா தான் ஹீரோயின். இதில் ஹீரோவாக அபிநய் நடிக்கிறார்.அபர்ணாவைத் தவிர மதிஷா புதுமுகமும் இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறாராம். அவருக்கு ஜோடி வரன் என்ற புதுமுகமாம்.நாசர், பிரமிட் நடராஜன் ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு பாடல்களை வைரமுத்து எழுத, இசையமைக்கிறார் தினா.கதை, திரைக்கதை. இயக்கம் செய்வது ரஞ்சித்குமார்.படத்தின் சூட்டிங் கேரளா, கோவை, ஊட்டி, ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. பாடல் காட்சிகளுக்காக அபர்ணா, மதிஷாவைகனடா, சுவிஸ் பக்கம் தூக்கிக் கொண்டு போகவுள்ளார்களாம்.பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீசாம்.சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் இவருக்கு தங்கச்சி கேரக்டர் தான் என்றாலும், இவரைச் சுற்றித்தான் கதையேநகர்கிறதாம்.இந்தப் படங்கள் எல்லாம் வந்துவிட்டால் கோடம்பாக்கத்தில் தான் நிலைத்துவிட முடியும் என்று ரொம்பவே நம்புகிறார் அபர்ணா.நல்ல இருக்க வாழ்த்துக்கள்..

அபர்ணாவின் 4 படங்கள் அபர்ணாவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.புதுக்கோட்டையில் இருந்து சரவணனில் அறிமுகமான இந்த கருப்பு குதிரைக்கு அத்தோடு சான்ஸ் இல்லாமல் போனது. இதனால்மலையாளத்துக்குப் போனவரை வைத்து சிலர் தமிழில் பூஜை போட்டனர். ஆனால், எதுவுமே படமாக மாறவில்லை.இந் நிலையில் டகடகவென அடுத்தடுத்து புதிய படங்கள் புக் ஆகி, சூட்டிங்குகளும் தொடங்கிவிட்டன. இதனால் மெகாமகிழ்ச்சியில் இருக்கிறார் இந்த கருப்பு நிலா.சரவண சுப்பையா இயக்கத்தில் ஸ்னேகா ஹீரோயினாக நடித்து முடித்துள்ள ஏபிசிடியில் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார்அபர்ணா.இதைத் தவிர மா.மு. என்ற படத்திலும் சேரன் இயக்கும் பொக்கிஷம் படத்திலும் நடிக்கும் அபர்ணாவுக்கு இப்போது இன்னொருபடமும் தானாகவே தேடி வந்துவிட்டது.ஆகாஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பிரியா நாயர் என்ற பெண் புரடியூசர் தயாரிக்கும் நண்பனின் காதலி என்ற படத்தில்அபர்ணா தான் ஹீரோயின். இதில் ஹீரோவாக அபிநய் நடிக்கிறார்.அபர்ணாவைத் தவிர மதிஷா புதுமுகமும் இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறாராம். அவருக்கு ஜோடி வரன் என்ற புதுமுகமாம்.நாசர், பிரமிட் நடராஜன் ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு பாடல்களை வைரமுத்து எழுத, இசையமைக்கிறார் தினா.கதை, திரைக்கதை. இயக்கம் செய்வது ரஞ்சித்குமார்.படத்தின் சூட்டிங் கேரளா, கோவை, ஊட்டி, ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. பாடல் காட்சிகளுக்காக அபர்ணா, மதிஷாவைகனடா, சுவிஸ் பக்கம் தூக்கிக் கொண்டு போகவுள்ளார்களாம்.பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீசாம்.சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் இவருக்கு தங்கச்சி கேரக்டர் தான் என்றாலும், இவரைச் சுற்றித்தான் கதையேநகர்கிறதாம்.இந்தப் படங்கள் எல்லாம் வந்துவிட்டால் கோடம்பாக்கத்தில் தான் நிலைத்துவிட முடியும் என்று ரொம்பவே நம்புகிறார் அபர்ணா.நல்ல இருக்க வாழ்த்துக்கள்..

Subscribe to Oneindia Tamil

அபர்ணாவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.

புதுக்கோட்டையில் இருந்து சரவணனில் அறிமுகமான இந்த கருப்பு குதிரைக்கு அத்தோடு சான்ஸ் இல்லாமல் போனது. இதனால்மலையாளத்துக்குப் போனவரை வைத்து சிலர் தமிழில் பூஜை போட்டனர். ஆனால், எதுவுமே படமாக மாறவில்லை.

இந் நிலையில் டகடகவென அடுத்தடுத்து புதிய படங்கள் புக் ஆகி, சூட்டிங்குகளும் தொடங்கிவிட்டன. இதனால் மெகாமகிழ்ச்சியில் இருக்கிறார் இந்த கருப்பு நிலா.

சரவண சுப்பையா இயக்கத்தில் ஸ்னேகா ஹீரோயினாக நடித்து முடித்துள்ள ஏபிசிடியில் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார்அபர்ணா.


இதைத் தவிர மா.மு. என்ற படத்திலும் சேரன் இயக்கும் பொக்கிஷம் படத்திலும் நடிக்கும் அபர்ணாவுக்கு இப்போது இன்னொருபடமும் தானாகவே தேடி வந்துவிட்டது.

ஆகாஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பிரியா நாயர் என்ற பெண் புரடியூசர் தயாரிக்கும் நண்பனின் காதலி என்ற படத்தில்அபர்ணா தான் ஹீரோயின். இதில் ஹீரோவாக அபிநய் நடிக்கிறார்.

அபர்ணாவைத் தவிர மதிஷா புதுமுகமும் இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறாராம். அவருக்கு ஜோடி வரன் என்ற புதுமுகமாம்.

நாசர், பிரமிட் நடராஜன் ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு பாடல்களை வைரமுத்து எழுத, இசையமைக்கிறார் தினா.கதை, திரைக்கதை. இயக்கம் செய்வது ரஞ்சித்குமார்.


படத்தின் சூட்டிங் கேரளா, கோவை, ஊட்டி, ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. பாடல் காட்சிகளுக்காக அபர்ணா, மதிஷாவைகனடா, சுவிஸ் பக்கம் தூக்கிக் கொண்டு போகவுள்ளார்களாம்.

பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீசாம்.

சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் இவருக்கு தங்கச்சி கேரக்டர் தான் என்றாலும், இவரைச் சுற்றித்தான் கதையேநகர்கிறதாம்.

இந்தப் படங்கள் எல்லாம் வந்துவிட்டால் கோடம்பாக்கத்தில் தான் நிலைத்துவிட முடியும் என்று ரொம்பவே நம்புகிறார் அபர்ணா.

நல்ல இருக்க வாழ்த்துக்கள்..

Read more about: aparna is back in tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil