எல்லோரும் கேட்கிறாங்க, எனக்கே ஒரு மாதிரியாக இருக்கு: சீறும் தமன்னா

By Siva

மும்பை: புது வீட்டு சர்ச்சை குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வெர்சோவா பகுதியில் சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். அந்த வீட்டிற்கு அவர் இரட்டிப்பு விலை கொடுத்ததாக செய்திகள் வெளியாகின.

சதுர அடிக்கு அவர் ரூ. 80 ஆயிரத்து 778 கொடுத்ததாக கூறப்பட்டது. தனது கனவு இல்லத்திற்காக அவர் ரூ. 16 கோடி செலவு செய்துள்ளார்.

இரட்டிப்பு விலை

இரட்டிப்பு விலை

தமன்னா ஏன் இரண்டு மடங்கு விலை கொடுத்து அந்த வீட்டை வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். ஏன் தமன்னா, இப்படியா அதிக விலை கொடுத்து வீடு வாங்குவது என்று அவரின் இந்தி ஆசிரியர் கூட மெசேஜ் அனுப்பி கேட்டாராம்.

தமன்னா

தமன்னா

நான் ஒரு சிந்தி. நான் ஏன் ஒரு அபார்ட்மென்டுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்கப் போகிறேன் என்று என் இந்தி ஆசிரியரிடம் கேட்டேன். பின்னர் ஒவ்வொருத்தராக வீடு குறித்து என்னிடம் கேட்கத் துவங்கினர். இது என்னடா வம்பாப் போச்சு, நான் செய்யாத ஒன்றை செய்ததாக கூறுகிறார்களே என்று எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது என்கிறார் தமன்னா.

பெற்றோர்

பெற்றோர்

நான் வீடு வாங்கியுள்ளது உண்மை தான். ஆனால் அதற்கு நான் இரண்டு மடங்கு விலை கொடுக்கவில்லை. அந்த வீடு தயாரான பிறகு நானும், என் பெற்றோரும் அங்கு குடிபுகுவோம் என்று தமன்னா தெரிவித்துள்ளார். தமன்னா விளக்கம் அளித்தும் அவர் பேச்சை நம்பாமல் ரசிகர்கள் இன்னும் விலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுப் படம்

புதுப் படம்

2 ஆயிரத்து 55 சதுர அடி கொண்ட அந்த அபார்ட்மென்ட்டை தமன்னா சமீர் போஜ்வானி என்பவரிடம் இருந்து ரூ. 16.6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். தமன்னா போலே சூடியான் என்கிற இந்தி படத்தில் பேட்ட பட வில்லன் நவாஸுத்தீன் சித்திக்கி ஜோடியாக நடிக்க உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X