நீங்க ரொம்ப க்யூட் சார், ஸ்வீட் சார்: முருகதாஸை புகழும் வரலட்சுமி

சென்னை: சர்க்கார் திரைப்படத்திற்கான டப்பிங்கை வரலட்சுமி நிறைவு செய்துள்ளார்.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

AR.Murugadoss is Varalakshmi cutest director!

சர்கார் படத்திற்கான டப்பிங் வேலைகளை சமீபத்தில் விஜய் முடித்ததாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்போது வரலட்சுமியும் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதஸுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்து, "சர்கார் திரைப்படத்தின் டப்பிங் முடிந்தது. உங்களுடன் பணியாற்றியது மிகவும் பிடித்திருந்தது. நான் பணியாற்றிய இயக்குனர்களில் மிக க்யூட்டான மற்றும் ஸ்வீட்டான இயக்குனர் நீங்கள்" என ட்வீட் செய்துள்ளார். எப்போதும் அமைதியை கடைபிடிக்கும் இயக்குனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான கதாப்பாத்திரங்களை விரும்பும் நடிகையான வரலட்சுமி இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் நன்கு பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.

சர்கார் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பழ கருப்பையா, ராதாரவி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக ரிலீஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X