சிம்ரன் சாமியாட்டம்.. அரண்மனை 4 படத்தில் குஷ்புவுடன் எப்படி ஆடுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ இதோ!
சென்னை: சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அம்மன் பாடலுக்கு சிம்ரன் மற்றும் குஷ்பு சாமியாட்டம் ஆடியுள்ளனர். அதன் மேக்கிங் வீடியோவை இப்போது நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமன்னா, ராஷி கன்னா, சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் ஹாரர் காமெடியாக மிரட்டுவதாக ரசிகர்கள் இந்த கோடை விடுமுறைக்கு கூட்டம் கூட்டமாக சென்று அந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

கடந்தாண்டு சம்மர் ஹாலிடேவை முன்னிட்டு சந்திரமுகி 2 திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படம் சந்திரமுகி படத்தையும் மறக்க செய்யும் அளவுக்கு சொதப்பலாக வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.
கலவையான விமர்சனங்கள்: அரண்மனை 4 படத்துக்கும் ரிலீசுக்கு முன்பாக பெரிதாக எதிர்பார்ப்பே இல்லை. ஆனால் வெளியான பின்னர் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் டாக் ரசிகர்களை தியேட்டரை நோக்கி வர வைத்துள்ளது. விமர்சன ரீதியாக இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

11 கோடி ரூபாய் வசூல்: இந்த ஆண்டு வெளியான பல படங்கள் இந்த அளவுக்கு வசூலை பெறமுடியாமல் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலை சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை4 திரைப்படம் பெற்றுள்ளது குஷ்பூ மற்றும் சுந்தர் சியை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தோல்வி படங்களுக்கு பிறகு சுந்தர் சிக்கு ஒரு வெற்றிப் படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது.
சிம்ரன் சாமியாட்டம்: இந்த வெற்றிக்கு ஒரு பெரிய தூணாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை சிம்ரன் குஷ்புவுடன் இணைந்து ஆடும் அந்த அம்மன் பாடல் அமைந்திருக்கிறது. யூத் படத்தின் ஆல் தோட்ட பூபதி முதல் பல படங்களில் சிம்ரன் சிறப்பாக நடனமாடியுள்ள நிலையில், கடைசியாக பிதமகன் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடனமாடி இருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் சிம்ரன் ஆடிய சாமியாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தியேட்டரில் பல பெண்கள் இந்த அம்மன் பாடல்களுக்கு சாமி ஆட்டம் ஆடி வருகின்றனர்.
மேக்கிங் வீடியோ: "உடுக்கை பிறந்ததம்மா ஒரத்தநாடு பூமியிலே, சூலம் பிறந்ததம்மா சூரக்காட்டு பூமியிலே" என உருவாகி உள்ள இந்த பாடல் எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இந்த பாடலில் நடனமாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த அக்கா குஷ்புவுக்கும் ஆட வைத்த பிருந்தா அக்காவுக்கும், சுந்தர் சி சாருக்கும் என் நன்றி என சிம்ரன் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சுந்தர் சி நடித்த ஐந்தாம் படை படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











