»   »  மறுபடியும் அர்ச்சனா!

மறுபடியும் அர்ச்சனா!

Subscribe to Oneindia Tamil

தனுஷுக்கு அம்மாவாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்த அர்ச்சனா, சத்யராஜுக்கு ஜோடியாக தங்கர் பச்சான் படத்தில் நடிக்கிறார்.

பாலு மகேந்திராவின் அழகிய அறிமுகங்களில் ஒருவர் அர்ச்சனா. கருப்பழகியான அர்ச்சனா, தனது நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். பல படங்களில் ஹீரோயினாக நடித்த அர்ச்சனா, தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றவர்.

சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்து அர்ச்சனா திடீரென காணாமல் போனார். பல கால இடைவெளிக்குப் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்தார்.

தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்தார். படம் போணியாகவில்லை. எனவே அர்ச்சனாவின் ரீ என்ட்ரியும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இருப்பினும் அர்ச்சனாவின் ரீஎன்ட்ரி வீணாகவில்லை. அவரைத் தேடி சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். அதில் இப்போதைக்கு தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மட்டும் ஒத்துக் கொண்டு நடித்து வருகிறாராம் அர்ச்சனா.

தங்கர்பச்சான் எழுதிய சிறுகதைதான் இந்த ஒன்பது ரூபாய் நோட்டு. சத்யராஜை வைத்து இந்தப் படத்தை இழைத்துள்ளார் தங்கர். சத்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அர்ச்சனா.

கிட்டத்தட்ட விருதுப் படம் போல இந்தப் படத்தை இயக்கி வரும் தங்கர், மசாலாத்தனம் இல்லாமல், மனச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு இல்லாமல், சினிமா இலக்கண வரம்புக்குள் சிக்காமல் இப்படத்தை இயக்கி வருகிறாராம்.

அர்ச்சனாவுக்கு இந்தப் படம் இன்னொரு விருதை தேடித் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு கதையிலும், அர்ச்சனாவின் கேரக்டரிலும் பலம் ஜாஸ்தியாம்.

அசத்துங்க அர்ச்சனா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil