தெலுங்கில் அர்ச்சனா குத்தாட்டம்
| Click here for more images |
எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் அதிரடி நாயகனாக அறிமுகமாகிய படம் வேகம். முதல் படத்தையே வெற்றிப் படமாக கொடுத்த சந்தோஷத்தில் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் அஸ்வின்.
ஆனால், வேகம் படத்தின் நாயகி அர்ச்சனாவுக்குத்தான் நேரம் சரியில்லை. திருப்திகரமான வகையில் நடிப்பிலும், கிளாமரிலும் கலக்கியிருந்தும் கூட, அவரைத் தேடி புதிய பட வாய்ப்புகள் வரவில்லை.
இதனால் அப்செட் ஆகியிருந்த அர்ச்சனாவைத் தேடி ஒரு குத்தாட்ட வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.
என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்த அர்ச்சனா, வருகிற வாய்ப்பை ஏன் மிஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அந்த குத்தாட்டத்தை வேண்டி விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டாராம். விரைவில் ஹைதராபாத் பறக்கும் அர்ச்சனா, தித்திக்கும் வகையில் அந்த குத்தாட்டத்தை ஆடிக் கொடுக்கப் போகிறாராம்.
தனது குத்தாட்டத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தால் அதைத் தொடர்வது என்றும், இல்லாவிட்டால் ஹீரோயின் சான்ஸுக்கு கடுமையாக முயற்சிப்பது என்றும் தீர்மானித்துள்ளாராம் அர்ச்சனா.


Click it and Unblock the Notifications











