கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்திய அர்ஜுன் பட நடிகை!
மும்பை : இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வரும் குரானா இரண்டாவது அலைக்கு பலரும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
போதுமான அளவிற்கு திரை பிரபலங்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு தாங்களும் அதைப் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் அர்ஜுன் பட நடிகை ஒருவர் குரானாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தினமும் யோகா செய்ய வேண்டும் என பீச்சில் உடலை வில்லாக வளைத்து அசத்தியுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிப்புடன் கவர்ச்சியையும்
கன்னடம்,ஹிந்தி,தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ள நடிகை அர்ச்சனா குப்தா தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான மாஸி திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே நடிப்புடன் கவர்ச்சியையும் அள்ளித் தெளித்த இவருக்கு ரசிகர்களிடம் எக்கச்சக்க வரவேற்பு இருந்தது.

ஏராளமாக உள்ளனர்
ஒரே சமயத்தில் பல மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த இவர் மாஸி படத்திற்கு பிறகு தமிழில் ஓரிரு படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் அவை இன்றுவரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்றளவும் இவரை சமூக வலைதளப் பக்கங்களில் பின்பற்றும் தமிழ் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

எப்போது நடிப்பீர்கள்
2019ஆம் ஆண்டு வெளியான பாய்சன் சீரியஸில் கடைசியாக நடித்திருந்த அர்ச்சனா குப்தா அதைத் தொடர்ந்து மீண்டும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மீண்டும் தமிழில் எப்போது நடிப்பீர்கள் என ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் கேட்டு வர மிக விரைவிலேயே புதிய திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடம்பை வில்லாக வளைத்து
கவர்ச்சியில் மட்டுமல்லாமல் உடற்பயிற்சியிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அர்ச்சனா குப்தா ஏற்கனவே பல யோகா செய்து அசத்தும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இப்பொழுது குரானா சூழல் தீவிரமாக நிலவி வருவதால் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்கரையில் உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்தியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











