மலை உச்சியில் ஒற்றைக்காலில் யோகா… அர்ச்சனா குப்தாவின் அசத்தல் போட்டோஸ் !
மும்பை : இதுவரை மழையில் நனைந்த படி பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வந்த அர்ச்சனா குப்தா தற்போது வித்தியாசமாக யோகா செய்து அசத்தியுள்ளார்.
Recommended Video
மலை உச்சியில் ஒற்றைக்காலில் நின்றவாறு அசால்டாக யோகா செய்து அசத்தி அதைப் புகைப்படமாக எடுத்து தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளதால் இவரை பின்தொடரும் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகும் நிலையில், தற்பொழுது இந்த ஒற்றைக்கால் யோகா செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

பிரபலமான நடிகை
ஹிந்தி திரைப்படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் தொடர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ச்சனா குப்தா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவில் பல படங்களில் நடித்து பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.

முன்னணி நாயகர்களுடன்
தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அர்ச்சனா குப்தா, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்

முதல் படத்தில் கவர்ச்சி
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் மாசி திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்த அர்ச்சனா குப்தா, தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தனது கவர்ச்சியின் மூலம் அனைவரையும் தத்தளிக்க செய்தார்.

"பாய்சன்" வெப் சீரிஸில்
இவ்வாறு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அர்ச்சனா குப்தா, தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் திரைப்படங்களில் மட்டுமே தூள் கிளப்பி அதிரடி காட்டி வந்த அர்ச்சனா குப்தா சமீபத்தில் வெளியான "பாய்சன்" வெப் சீரிஸில் நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்

ரசிகர்களை மகிழ்வித்து
இவ்வாறு நடிப்பதில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் அர்ச்சனா குப்தா, நடிப்பது ஒருபுறமிருக்க சமூக வலைதளங்களிலும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

வித்யாசமான யோகா
அந்த வகையில் சமீபத்தில் மழையில் நனைந்தவாறு பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் குளிர்வித்து வந்த அர்ச்சனா தற்பொழுது ஒற்றைக்காலில் நின்று கொண்டு வித்யாசமான யோகா செய்து அசத்தியுள்ளார்.

யோகா செய்து அசத்தி
மழையில் நனைந்தவாறு புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து தற்போது மலையில் உள்ள குன்றின் மீது ஏரி ஒரு பாறையின் உச்சியில் நின்றுகொண்டு அசால்டாக ஒற்றைக்காலில் யோகா செய்து அசத்தியுள்ள இந்த அசாத்திய புகைப்படம் அனைவரையும் கவர்ந்து பிரமிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











