இந்த ஆட்டம் போதுமா.. மஞ்சள் சேலையில் த்ரிஷா போட்ட ‘மட்ட’ ஆட்டம்.. வீடியோ வெளியிட்ட அர்ச்சனா!

சென்னை: ஆசிரியர் தினத்தன்று வெளியான விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான இன்று ரசிகர்களின் பெரும் வரவேற்பில் திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் த்ரிஷா நடித்த நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் இணைந்து 'மட்ட' பாடலில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் த்ரிஷா.

goat vijay trisha

நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடனமாடியுள்ளார் என்கிற தகவல் கசிந்தாலும் கடைசி வரை அதை சீக்ரெட்டாக வெங்கட் பிரபு காப்பாற்றி தியேட்டரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக கொடுத்தது வேறலெவல் வைப் என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விமர்சனங்களை உடைத்த யுவன் சங்கர் ராஜா: கோட் படத்தில் இடம்பெற்ற விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் என வரிசையாக வெளியான 3 பாடல்களுமே ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை என புகார்கள் கிளம்பின. ஆனால், தியேட்டரில் பார்க்கும் போது, 3 பாடல்களுமே கதையுடன் ஒன்றி ரசிகர்களை கவர்ந்த நிலையில், ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே 4வதாக 'மட்ட' பாடலை யுவன் சங்கர் ராஜா போட்டிருந்தார்.

கில்லி டான்ஸ்: நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து 'மட்ட' பாடலுக்கு நடனமாடியதும், அந்த பாடலின் நடுவே கில்லி படத்தின் "அப்படி போடு" பாடலின் ஸ்டெப்ஸை இருவரும் சேர்ந்து ஆடி ரசிகர்களுக்கு வேறலெவல் ட்ரீட் கொடுத்ததை எல்லாம் ரசிகர்கள் இதற்கு மேல் அனுபவிக்க முடியுமா என தெரியவில்லை. கடைசியாக தியேட்டரில் மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவார்கள் என்றே தெரிகிறது.

த்ரிஷா குத்தாட்ட வீடியோ: கோட் படத்தின் "மட்ட" பாடலில் த்ரிஷா இளைய தளபதியுடன் நடனமாடும் வீடியோ க்ளிம்ப்ஸை தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டு நடிகை த்ரிஷாவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தலைவி என கத்திய ரசிகர்கள்: கோட் படத்தை முதல் நாளே நடிகைகள் படையெடுத்து தியேட்டருக்கு வந்து பார்த்த காட்சிகள் வெளியாகின. நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து பார்த்தார். கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் தனித்தனியாக வந்து படம் பார்த்தனர். த்ரிஷாவை பார்த்த ரசிகர்கள் தலைவி என கத்தி கூச்சலிட்ட வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

மஞ்சள் சேலையில்: நடிகை த்ரிஷா மஞ்சள் சேலையில் இடுப்பு தெரிய கவர்ச்சி குத்தாட்டம் போட்டு விஜய் ரசிகர்களை குஷியாக்கி விட்டார். லியோ படத்தில் கூட இப்படியொரு பாடலை லோகேஷ் கனகராஜ் வைக்கவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு செம ட்ரீட் கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்து அஜித் படத்தில்: நடிகை த்ரிஷா விஜய்யின் லியோ படத்தில் ஹீரோயினாகவும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோவாகவும் நடித்த நிலையில், அடுத்து அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்கின்றனர். தமிழ் சினிமாவில் இப்போதைக்கு நயன்தாராவை விட டாப் இடத்தில் நடிகை த்ரிஷா தான் உள்ளார் என்றும் கூறுகின்றனர். தென்னிந்தியளவில் தனது மார்க்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X