ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவுக்கு நாளை திருமணம்?.. ஏற்பாடுகள் தீவிரம்?.. சூப்பர் வீடியோ
சென்னை: ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா ஹீரோயினாக இப்போது மாறியிருக்கிறார். அவரை நேஷனல் க்ரஷ் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார். இது ஒருபக்கம் இருக்க விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும்; இரண்டு பேருக்கும் கடந்த வருடத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் நாளை உதய்பூரில் வைத்து திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்; அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட திரையுலத்தில் தனது திரை பயணத்தை தொடங்கிய ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு திரையுலகம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த கீதா கோவிந்தம், புஷ்பா 1, புஷ்பா 2 உள்ளிட்ட ஏராளமான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் டோலிவுட்டில் அவரது மார்க்கெட் குறுகிய காலத்திலேயே உச்சத்துக்கு சென்றது. தெலுங்கு போன்றே தமிழிலும் வெற்றிக்கொடி நாட்டலாம் என்று கணக்கு போட்டு சுல்தான், வாரிசு படங்களில் நடித்தார். ஆனால் அவை தோல்வியையே சந்தித்தன.
பான் இந்தியா ஹீரோயின்: சூழல் இப்படி இருக்க அவரது கவனம் பாலிவுட்டுக்கும் சென்றது. அங்கேயும் பல வெற்றி படங்களில் நடித்தார். முக்கியமாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல் திரைப்படம் ஹிட்டானதோ இல்லையோ பெரிய சர்ச்சையை சந்தித்து சென்சேஷனல் ஆனது. சல்மான் கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கும் பாலிவுட்டில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியிருக்கும் அவரை நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

ராஷ்மிகாவின் காதல்: இதற்கிடையே கன்னட திரையுலகத்தில் அறிமுகமானபோது நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அது திருமணம் வரை செல்லவில்லை. அவரை பிரிந்த பிறகு கரியரில் கவனம் செலுத்திய மந்தனா; நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. தான் ஒரு நடிகரைத்தான் காதலிக்கிரேன் என மறைமுகமாக சில மேடைகளில் கூறினார். அவர் கூறும் நடிகர் விஜய் தேவரகொண்டாதான் என்பது பலரது கருத்து.
ரகசிய நிச்சயதார்த்தம்?: இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்துவிட்டதாகவும் தெரிகிறது. கடந்த வருடத்தில் அவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே மௌனம்தான் காத்து வருகிறார்கள். அதேசமயம் நிச்சயதார்த்தம்தான் ரகசியமாக நடந்தது; இரண்டு பேரின் திருமணமும் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திருமண் ஏற்பாடுகள் தீவிரம்?: மேலும் அவர்களுக்கு பிப்ரவரி இரண்டாம் தேதி திருமணம் நடக்கும் என்றும் ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் உதய்பூரில் சிட்டி பேலஸில் தான்யா என்பவர் வீடியோ ஒன்றை எடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் திருமண ஏற்பாடுகள் ஜோராக நடக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி அந்த வீடியோவில் இங்கே திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும்தான் இங்கே திருமணம் நடக்கவிருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











