மது குடிப்பது போல நடித்தால் கலாச்சார சீர்கேடா?: பிரியா ஆனந்த்
இப்பொழுதெல்லாம் டாஸ்மாக் சீன் இன்றி சினிமா இல்லை என்றாகிவிட்டது.
ஆண்களோடு பெண்களும் சரக்கடிப்பதுபோல சீன் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
சமர் படத்தில் சரக்கடித்த த்ரிஷா அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதேபோல ப்ரியா ஆனந்த் சமீபத்தில் ரிலீசான அரிமா நம்பி படத்தில் மது அருந்துவது போல நடித்திருந்தார். அதற்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

மது குடித்து சர்ச்சை
ஹீரோ உடன் அமர்ந்து, மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பிரியா ஆனந்த்.

சரி சமம்தான்
ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே, இந்த காட்சியை அமைத்துள்ளதாக, படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்து போய் சேரும்
இதை, ப்ரியா ஆனந்தும் வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், 'அந்த காட்சியில் அப்படி நடித்தால் தான், நாம் சொல்ல வரும் கருத்து, மக்களை சென்றடையும் என, இயக்குனர் கூறியதால், அப்படி நடித்தேன்.

கலாச்சார சீரழிவா?
ஒரு பெண், இப்படி நடந்து கொள்வதால் தான், கலாசாரம் சீரழியும் என்று யாராவது கூறினால், அதை என்னால் ஏற்க முடியாது' என்கிறார், ப்ரியா ஆன்ந்த்.


Click it and Unblock the Notifications











