சாக்லேட் பதுமையாக மாறிய ஐஸ்வர்யா அர்ஜுன்!
சென்னை: அனைவருக்கும் பிடித்த நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்
தமிழில் பட்டத்து யானை மூலம் அறிமுகமான இவர் கடைசியாக சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்திருந்தார்.
அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வரும் ஐஸ்வர்யா அர்ஜுன் இப்பொழுது சாக்லெட்டில் செய்த பதுமை போல ஜொலிக்கும் அட்டகாசமான புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் அர்ஜூனின் மூத்த மகள்
தென்னிந்தியாவில் அனைவரும் விரும்பக் கூடிய மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ள ஆக்சன் கிங் அர்ஜுன். அவரை தொடர்ந்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

பட்டத்து யானையில் கதாநாயகியாக அறிமுகமானார்
தமிழில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். காதல் கலந்த ஆக்ஷன் கதைகளில் வெளியான பட்டத்து யானை திரைப்படம் வெற்றி பெற்ற சூழலில் ஐஸ்வர்யா அர்ஜுன் மிகப் பிரபலம் அடைந்தார்

இரு மொழிகளிலும் வெளியான சொல்லிவிடவா
தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் வெளியான சொல்லிவிடவா என்ற திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.

தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை
நடிகர் அர்ஜுன் இயக்கி தயாரித்து இருந்த இந்த திரைப்படம் கன்னட மொழியில் மாபெரும் வெற்றி பெற்றது ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை

நேரடி தமிழ் படமொன்றில்
இந்நிலையில் தமிழில் அடுத்ததாக நேரடி படமொன்றில் நடித்து வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் பல கதைகளை கேட்டு வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை
கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா, திரிஷா என முன்னணி நடிகைகள் போல ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைக் கேட்டு வருகிறார்

இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க ரசிக்கக் கூடிய வகையில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

சாக்லேட்டில் செய்த பதுமை போல
அந்த வகையில் இப்போது சாக்லேட்டில் செய்த பதுமை போல சிங்கிள் பீஸ்ஸில் பார்க்கும் அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











