அர்ஜுன் ரெட்டி நடிகை வெளியிட்ட சூப்பர் ஹாட் புகைப்படங்கள்!
சென்னை : தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இதில் கதாநாயகியாக நடிகை ஷாலினி பாண்டே நடித்திருந்தார்.
அர்ஜுன் ரெட்டி வெற்றியை தொடர்ந்து தமிழில் அறிமுகமான ஷாலினி பாண்டே வுக்கு நடித்த எந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் ஹிந்தியில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ஷாலினி பாண்டே இப்பொழுது ஒட்டு மொத்த அழகையும் காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது.

வசூல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ஒட்டுமொத்த தெலுங்கு திரைப்படத் துறையையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த அளவிற்கு இப்படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக ஷாலினி பாண்டே அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழுக்கு 100% காதல்
நடித்த முதல் திரைப்படமே மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஷாலினி பாண்டே வுக்கு தெலுங்கு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 100% காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமான ஷாலினி பாண்டே அதை தொடர்ந்து ஜீவாவுடன் இணைந்து கொரில்லா என்ற கலகலப்பான காமெடி படத்திலும் நடித்தார்.
Recommended Video

ஜயீஸ்பாய் ஜோர்தார்
100% காதல் மற்றும் கொரில்லா என இரண்டு திரைப்படங்களும் ஷாலினி பாண்டேவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான நிசப்தம் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்பொழுது ஹிந்தியில் ஜயீஸ்பாய் ஜோர்தார் மற்றும் மகாராஜா உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

செம ஹாட்டாக மெழுகு சிலை போஸ்
தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்திலும் நடிக்க சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப் படங்கள் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அர்ஜூன் ரெட்டியில் சப்பிகேர்ளாக இருந்தவர் அதன் பிறகு உடல் எடையை முழுவதையும் குறைத்து இப்பொழுது ஸ்லிம்மான நடிகையாக மாறியுள்ளார். ஸ்லிம்மான தேகத்தைக் காட்டியவாறு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர் இப்பொழுது தொடையழகு மொத்தமும் தெரிய செம ஹாட்டாக மெழுகு சிலை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன


Click it and Unblock the Notifications











