'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க!

By

சென்னை: 'அர்ஜூன் ரெட்டி' ஷாலினி பாண்டே, இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், அர்ஜுன் ரெட்டி. இது தமிழ் உட்பட சில மொழிகளில் ரீமேக் ஆனது. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார், அவர் ஜோடியாக நடித்திருந்தார், ஷாலினி பாண்டே.

Arjun Reddy Actress Shalini Pandey To Act Alongside Ranveer Singh

இந்தப் படத்துக்குப் பிறகு, பிரபலமான ஷாலினிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். தமிழில், ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, 100% காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா படங்களில் நடித்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் நிசப்தம் படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இந்தியிலும் அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது.

Arjun Reddy Actress Shalini Pandey To Act Alongside Ranveer Singh

இந்தி சினிமாவின் இளம் டாப் ஹீரோ, ரன்வீர் சிங் நடிக்கும் படம், ஜெயேஷ்பாய் ஜோர்தார் (Jayeshbhai Jordaar). இதில் குஜராத்திக்காரராக நடிக்கும் ரன்வீருக்கு ஹீரோயின் முடிவாகாமல் இருந்தது. இப்போது ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை திவ்யங் தக்கார் இயக்குகிறார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இது, காமெடி படம். இந்தக் கதைக்கு புதுமுகம் தேவைப்பட்டதால் ஷாலினியை ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது. ஷூட்டிங் தொடங்கிவிட்டது. அடுத்த வருடம் படம் வெளிவர இருக்கிறது.

ரன்வீர் சிங்குடன் நடிக்க, முன்னணி ஹீரோயின்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஷாலினிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது லக் என்கிறார் சினிமாவில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X