கருப்பு உடையில் கன்னா பின்னா அழகில் அர்ஜுன் ரெட்டி ஹீரோயின்.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் மெகா ஹிட் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே
தமிழில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 100% காதல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்
தென் இந்தியாவைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் ஷாலினி பாண்டே இப்பொழுது கருப்பு உடையில் கன்னா பின்னா அழகில் உள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

காதலை வேறு கோணத்தில்
தென்னிந்திய ஐகானாக கொண்டாடப்பட்டு வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு அர்ஜுன் திரைப்படம் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. காதலை மிக வித்தியாசமான கோணத்தில் காட்டியிருந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஷாலினி பாண்டே நடித்திருந்தார். அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ஷாலினி பாண்டேவுக்கு அறிமுகப்படமாக இருந்தாலும் அதில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார். குறிப்பாக விஜய் உடன் காதல் காட்சிகள் மிக தத்ரூபமாக இருந்தது அனைவருக்கும் பிடித்திருந்தது .

அர்ஜுன் ரெட்டியில் அறிமுகம்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் பின் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஷாலினி பாண்டேவுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அர்ஜுன் ரெட்டி கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் உடனடியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 100% காதல் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஹிந்தி பட வாய்ப்புகள்
அதைத்தொடர்ந்து கொரில்லா, நிசப்தம் உள்ளிட்ட படங்களிலும் ஷாலினி நடித்திருந்தாலும் அவருக்கு தமிழில் எந்த படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. இந்நிலையில் ஷாலினிக்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஜயீஸ்பாய் ஜோர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

கருப்பு உடையில் கன்னாபின்னா அழகில்
தென்னிந்தியாவைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்க இருக்கும் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கும் அதேசமயம் இரண்டாவது கதாநாயகியாகவும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் உடல் எடையை குறைத்து ஒல்லியான தேகத்துடன் தற்போது வலம் வந்து கொண்டுள்ளார் . இந்த நிலையில் இப்பொழுது கருப்பு உடையில் கன்னாபின்னா என கொள்ளை அழகில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











