அர்ஜுனின் 2வது மகளும் நடிகையாகிறார்: அவரையும் விஷாலே அறிமுகம்
சென்னை: அர்ஜுனின் இளைய மகளும் நடிக்க வருகிறாராம்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்று 2 மகள்கள் உள்ளனர். அதில் ஐஸ்வர்யா விஷால் ஜோடியாக பட்டத்து யானை படத்தில் அறிமுகமானார். வெளிநாட்டில் படித்த ஐஸ்வர்யாவை பட்டத்து யானையில் நடிக்க வைக்க முயற்சி செய்ததே விஷால் தான்.
அர்ஜுனிடம் ஐஸ்வர்யாவை என் படத்தில் நடிக்க வையுங்களேன் என்று கேட்க அவரும் ஓகே சொன்னார்.

படம் ஊத்திக்கிச்சு
பட்டத்து யானை விஷாலை கீழே தள்ளிவிட்டது. படம் ஓடாததில் இயக்குனருக்கும் பெரிய கவலை.

நீங்க வளரணும் ஐஸ்
ஐஸ்வர்யா அர்ஜுன் பார்க்க பொம்மை போன்று அழகாக உள்ளார். ஆனால் நடிப்பில் இப்பொழுது தான் ப்ரீகேஜியில் உள்ளார். கற்க வேண்டியது நிறைய உள்ளது ஐஸ்.

2வது மகள்
அக்கா ஐஸ்வர்யாவுடன் ஷூட்டிங் சென்று வந்த அஞ்சனாவுக்கும் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளதாம். அதனால் இத்தனை நாட்களாக சினிமா ஆசையில்லாதவருக்கு தற்போது நாமும் ஒரு ரவுண்ட் வருவோம் என்ற நினைப்பு வந்துள்ளது.

விஷால் தான்
ஐஸ்வர்யாவை போன்று அஞ்சனாவையும் நான் தான் அறிமுகப்படுத்துவேன் என்று விஷால் அர்ஜுனிடம் கூற அவரும் சம்மதத்தை தெரிவித்துவிட்டாராம். அடுத்ததாக விஷால் தயாரிக்கும் படத்தில் அஞ்சனா தான் நாயகி.


Click it and Unblock the Notifications











