முதல்வன் படத்துல நடந்த விபத்து.. நடுராத்திரி அந்த கோலத்தில் அப்பா.. கண்கலங்கிய பேசிய அர்ஜுனின் மகள்!

சென்னை: அதிரடியான ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து 'ஆக்‌ஷன் கிங்' என பெயர் எடுத்த நடிகர் அர்ஜுன், நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் பல வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர், தனது மகளை முதன்மை கதாபாத்திரத்திரத்தில் நடிக்கும் 'சீதா பயணம்' என்ற புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ளது.

ஜென்டில்மேன், முதல்வன், ஜெய் ஹிந்த் போன்ற தேச பற்று கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜூன் ஒரு சில படங்களில் கொடூர வில்லனாகவும் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல்
ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை உள்ளிட்ட பன்னிரண்டு திரைப்படங்களை இயக்கி உள்ளார். 6 வருடத்திற்கு பின் இவர், 'சீதா பயணம்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

Arjun Aishwarya seetha payanam
Photo Credit:

சீதா பயணம்: இந்தத் திரைப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அர்ஜுனின் 'ஸ்ரீராம் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

காதல் கதை: இந்த திரைப்படம் 14ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா அர்ஜுன், காதலை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாகி உள்ளது. அப்பாவின் இயக்கத்தில் இதற்கு முன் சொல்லிவிடவா என்கிற படத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்பில் அப்பா மிகவும் கண்டிப்பாக இருப்பார். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறோம் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அப்பா எப்போதுமே எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்காக மெனக்கெடுவார், கடுமையாக உழைப்பார். முதல்வன் படப்பின் போது, நள்ளிரவு 2 மணிக்கு வந்தார். அவர் கழுத்து எல்லாம் எரிந்து போய் இருந்தது. பார்த்து அனைவருமே பயந்துவிட்டோம். முதல்வன் படத்தில் வீட்டை வில்லன் வெடி குண்டுவெடித்து எரிந்துவிடுவார்கள் அந்த சீனில், அப்பா விபத்தி சிக்கி கழுத்து எரிஞ்சி போச்சு, அதை நினைக்கும் போதே இப்பவும் கஷ்டமா இருக்கு என அந்த பேட்டியில் ஐஸ்வர்யா கண்ணீருடன் பேசி இருந்தார்.

காதல் திருமணம்: நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சென்னையில் அர்ஜூன் கட்டிய அர்ஜுனின் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது. இத்திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X