அடுத்த த்ரில்லர்.. அருள்நிதிக்கு ஆந்திராவில் இருந்து வருது ஜோடி.. யார் இந்த அவந்திகா மிஷ்ரா?
சென்னை: அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள த்ரில்லர் படத்தில் நடிக்க டோலிவுட் நடிகை அவந்திகா மிஷ்ரா தேர்வாகி உள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி திரைப்படம் ஹாரர் த்ரில்லராக வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
கடைசியாக கே13 படத்தில் நடித்திருந்த அருள்நிதி அடுத்ததாக எருமை சாணி புகழ் விஜய் ராஜேந்திரா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

வெற்றியும் தோல்வியும்
சிறந்த திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதிக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைத்து வருகின்றன. செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அருள்நிதி 2010ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

லோ பட்ஜெட்
லோ பட்ஜெட்டில் நல்ல திரைக்கதையுடன் கூடிய படங்களில் நடித்து அசத்தி வருகிறார் அருள்நிதி. வம்சம் படத்தைத் தொடர்ந்து, உதயன், மெளனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், டிமான்டி காலனி, நாலு பேரும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே 13 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எருமை சாணி விஜய்
யூடியூபில் பிரபலமான எருமை சாணி விஜய், அருள்நிதியின் அடுத்த படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். கே 13 படத்தில் அருள்நிதிக்கு நண்பனாக நடித்த விஜய் ராஜேந்திரா கல்லூரி பேக் ட்ராப்பில் ஒரு அருமையான த்ரில்லர் கதையை அருள்நிதிக்கு சொல்ல அவருக்கும் பிடித்துப் போய், இந்த புராஜெக்ட் கமீட் ஆகி இருக்கிறது.

அவந்திகா மிஷ்ரா
தலைநகர் டெல்லியில் பிறந்து வளர்ந்த அவந்திகா மிஷ்ரா மாடலிங் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, டோலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மாயா, மீக்கு மாத்ரம் செப்தே, பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவந்திகா மிஷ்ரா அருள்நிதிக்கு ஜோடியாக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே
ஆனால், அருள்நிதியின் டைட்டில் வைக்காத த்ரில்லர் படத்திற்கு முன்பே, அவந்திகா மிஷ்ரா, அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் நெஞ்சமெல்லாம் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி உள்ளார். ஆனால், கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையடையவில்லை.


Click it and Unblock the Notifications











