கஜகஸ்தானில் கடகட குதிரை சவாரி .. அருண்விஜய் லேட்டஸ்ட் போஸ்ட்!

சென்னை : அக்னிசிறகுகள் படத்திற்காக கஜகஸ்தான் சென்ற அருண்விஜய் வெள்ளை நிற குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அக்னி சிறகுகள் படத்திற்காக படக்குழு ஜரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்ய நாட்டு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வந்தது . இந்த படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழு இந்தியா திரும்பியிருந்தது அதன்பின் தற்போது படக்குழு அருண்விஜய் மற்றும் சிலரின் காட்சிகளை படமாக்க மீண்டும் கஜகஸ்தான் சென்றிருக்கிறது .

Arunvijay riding a horse in Kazakhstan

கஜகஸ்தான் சென்று அங்கு கடும் உரைய வைக்கும் பனியில் படக்குழு படப்பிடிப்பை நடத்தி வருகிறது . அருண்விஜய் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதில் இருந்து தற்போது எல்லா நடவடிக்கைகளையும் ட்விட்டர் மூலம் கஜகஸ்தானில் இருந்த படியே பகிர்ந்து வருகிறார் .

படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் உரைய வைக்கும் 9டிகிரிக்கும் கீழ் உள்ள பனி பிரேதசத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி எனும் நகரில் நடந்து வருகிறது .

Arunvijay riding a horse in Kazakhstan

படப்பிடிப்பில் அருண்விஜய் வெள்ளை நிற குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த காட்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது அருண்விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் .அக்னி சிறகுகள் படத்திற்காக படக்குழு மிகுந்த சிரமத்துடன் பல நாடுகளில் சுற்றி திரிந்து உறையும் பனியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

அருண்விஜய் தற்போது தொடர் வெற்றி படங்களுக்கு மத்தியில் மிக பெரிய மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார். அருண்விஜய் தற்போது அக்னி சிறகுகள் படத்தில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் நரேனின் மாஃபியா படத்தில் நடித்து வருகிறார். அடுத்தாக சினம் மற்றும் பாக்ஸர் படங்களிலும் நடித்து வருகிறார். அருண்விஜயின் வா டீல் படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கிறது அந்த படமும் எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர் .

Arunvijay riding a horse in Kazakhstan

அக்னிசிறகுகள் படத்தை இயக்குனர் நவீன் இயக்கி வருகிறார். படத்தில் விஜய் ஆண்டனி , அருண்விஜய் , அக்ஷ்ரா ஹாசன், பிரகாஷ் ராஜ்,நாஸர், தயாரிப்பாளர் சதீஷ் குமார் மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் .இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது .படத்தை பிரபல தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்சின் டி.சிவா தயாரித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X