தற்போதைய டிரென்டிற்கு அப்டேட் ஆகி வரும் அதிதி பாலன்

Recommended Video

Aruvi Aditi Balan Recent Photoshoot:கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்ட அதிதிபாலன்

சென்னை : 2017 ம் ஆண்டு வெளியான பல திரைப்படங்களில் ஒரு வித்யாசமான திரைப்படமாக ரசிகர்களிடமும் விமர்சனத்திலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் 'அருவி'. அதில் தந்து சிறப்பான நடிப்பால் நாம் பக்கத்துக்கு வீடு பெண் போன்ற ஒரு பீல் கொடுத்தார் அதிதி பாலன்.

அதிதி 2017 டிசம்பரில் வெளிவந்த 'அருவி' படத்தின் மூலம் அறிமுகமானவர் .அந்த படத்திற்க்கு முன்பே அதிதி என்னை அறிந்தாள் படத்தில் 'த்ரிஷாவின்' நண்பராக நடித்திருப்பார் ,இதனை பலரும் அருவி படத்தை பாரத்த பின்பு தான் கவனித்தனர்.

Aruvi fame Adithi balan latest photo clicks

அருவி படம் அறிமுக இயக்குனர் அருன் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தை தயாரித்திருந்தார் பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு . படத்தில் அதிதி பாலன்,அஞ்சலி வரதன் ,லஷ்மி கோபாலாசாமி போன்றவர்களும் நிறைய புதமுகங்களும் நடித்திருத்தனர். அதில் 'பீட்டராக' நடித்திருந்த பிரதீப்பும் ஒருவர். பிரதீப் பிக்பாஸ் 'கவினின்' நண்பர். பிக்பாஸ் வீட்டில் ஒரு எப்பிசோடில் வந்து தனது நண்பனுக்கு அறிவுரைகள் கூறி சென்றிருப்பார். அதில் அவர் கவினை அடித்தபோது பரபரப்பாகி அந்த எப்பிஸோடை பற்றியே பலரும் பேசி வந்தனர்.

அருவி படம் ஒரு பெண்ணின் வலியை பற்றி பேசியிருக்கும் படம் .இந்த சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளால் பாதிக்க படும் ஒரு பெண். அதை எவ்வாறு எதிர்த்து போராடுகிறார் என்பதே அருவி படக்ககதை . சில படங்கள் நமது பொழுதுபோக்குகாக எடுக்க பட்ட படங்களாக இருக்கும். ஆனால் அருவி அவற்றில் இருந்து வேறுபட்ட படம் . அருவி படம் பார்த்த பலரும் சோகம் தாக்கி அழுதுதான் படத்தை விட்டு வெளியே வந்தனர் .

Aruvi fame Adithi balan latest photo clicks

அருவி கதாபாத்திரத்தில் நடித்த அதிதி மிக சிறப்பாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அருவி மூலம் அதிதிக்கு பல விருதுகளும் வழங்கபட்டது.

தற்போது நடிகைகள் மற்றும் நடிகையாக நினைக்கும் பல பெண்களும் போட்டோசூட் செய்து இணையத்தில் ரசிகர்களை சேர்பதில் மிக கவனமாய் இருக்கிறார்கள் .ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான போட்டோ சூட்களை செய்து வரும் ,நிலையில் பல நடிகைகள் 'செக்சி போட்டோ சூட்' அதாவது கவர்ச்சி நிறைந்த போட்டோ சூட்கள் செய்தே ரசிகர்களை பெருக்கி வருகிறார்கள்.சிலருக்கு இந்த போட்டோ சூட் மூலமாக பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன.

Aruvi fame Adithi balan latest photo clicks

அதில் தற்போது நடிகை அதிதிபாலனும் இணைந்துள்ளார் .அருவி படத்திற்கு பிறகு படத்தில் ஏதும் நடிக்காமல் ஊர் சுற்றி வந்த அதிதிபாலன் தற்போது மஞ்சள் நிற சேலையில் கவர்ச்சிகரமான 6 போட்டோக்களை தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் .இந்த வகையான போட்டோ சூட் ரசிகர்களை கவரவா அல்லது படவாய்புக்காகவா என்று எந்த தகவலையும் அதிதி கூறவில்லை.

இப்படி கவர்ச்சி சார்ந்த போட்டோக்ளை இன்ஸாடாகிராமில் பதிவிட்டு பல நடிகைகள் வாய்பை தட்டிபரித்து இருக்கின்றனர். இது அதிதிக்கு பயன் தருமா என்பதை பொருத்திருந்து பார்போம். இந்த முறையில் தற்போது படவாய்ப்பு பெற்ற நடிகை திவ்யாபாரதி . இவர் ஜீ.வி. பிரகாஷின் 'பேச்சிலர்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இது கவர்ச்சி போட்டோ சூட் ட்ரெண்ட். ஒருவர் மாற்றி ஒருவர் தங்களது அழகை வெளிப்படுத்துவதில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஓரளவிற்கு பலன் அடைந்தாலும் அதை பார்க்கும் இளவட்டங்கள் தான் முழுமையான பலன் அடைகிறார்கள். இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர் இன்றைய நடிகைகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X