வீட்ல இருந்தா இப்படித்தான்.. வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்து பதற வைத்த அதிதி பாலன்!

சென்னை: அருவி படத்தில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் வியப்பில் ஆழ்த்தியவர் தான் அதிதி பாலன். நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்த போதும், இவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது அம்மணி கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, இணையத்தில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் அருவி. இந்த படத்தில் சமூக கருத்தை பேசும் துணிச்சல் கொண்ட பெண்ணாக நடித்திருந்தார் அதிதி பாலன். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அறிமுக நடிகைக்கான சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், லட்சுமி கோபாலசாமி, முகமது அலி பேக், கவிதா பாரதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Aruvi heroine aditi balan Glamorous black and white photos

அதிதி பாலன்: தமிழில் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்த அதிதி பாலன் மலையாளத்தில் கோல்டு கேஸ், படவேட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் வெளியான சமந்தாவின் படத்திலும் சமந்தாவின் தோழியாக ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, அருண் மாதேஷ்வர் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

வெறும் சட்டை மட்டும்தான்: அதிதிபாலன் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த போதும், இவருக்கு எதிர்பார்த்த படவாய்ப்பு வரவில்லை. இதனால், மற்ற நடிகைகளை போல அதிதி பாலனும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, இன்ஸ்டாகிராமில் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது இவர், ஸோஃபாவில் ஹாயாக படுத்துக்கொண்டு தொடை அழகை அப்பட்டமாக காட்டி உள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன் ரம்பாவுக்கு டப் கொடுப்பாங்க போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் குறு குறு பார்வையை பார்த்து ரசிகர்களின் ஏக்கத்தை அதிகரித்து இருக்கும் அதிதி பாலனின் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல குவிந்து வருகிறது.

முதல் காதல் பிரேக் அப்: அண்மையில் அதிதிபாலன் அளித்த பேட்டியில், பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன் என்றும் பக்கத்து ஸ்கூல் பையனை சைட் அடிக்க அந்த ஏரியாவுல தான் சாக்லேட், பிஸ்கட் நல்லா இருக்கும்னு போய்ட்டு வருவேன். ஆனால், 2 மாதத்திலேயே அந்த முதல் காதல் பிரேக்கப் ஆகி விட்டது என்றும் அதன் பின்னர் பல காதல் வந்து இருக்கு, நிறைய ரிலேஷன்ஷிப், பிரேக்கப் ஆகி இருக்கு என வெளிப்படையாக பேசி இருந்தார் அதிதி பாலன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X