ரெஜினாவை இந்த கோலத்தில் பார்த்திருக்கவே மாட்டீங்க பாஸ்!
அரவிந்த்சாமியின் அடுத்த படத்தில் ரெஜினா கெசண்ட்ரா நடிக்கிறார்.
Recommended Video

சென்னை: நடிகர் அரவிந்த் சாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா கெசண்ட்ரா.
எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமையுமா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் சினிமாவில் நடிகர் அரவிந்த்சாமியின் இரண்டாவது இன்னிங்ஸ் அமோகமாக இருக்கிறது.

தனிஒருவன் திரைப்படத்தில் மிரட்டியதற்கு பிறகு அசைக்க முடியாத சக்தியாக மீண்டும் உருவெடுத்துள்ளார். இப்போது நரகாசூரன், செக்க சிவந்த வானம், ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
அடுத்ததாக இயக்குனர் ராஜபாண்டியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா கெசண்ட்ரா நடிக்கிறார். இயக்குனர் ராஜபாண்டி இதற்கு முன் என்னமோ நடக்குது, அச்சமின்றி அச்சமின்றி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் நடித்திருந்தார் ரெஜினா. அப்படத்தில் வந்த ஏதேதோ ஆனேனே பாடலிலி தாராளமயமாக்கல் கொள்கையை கடைப்பிடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
இப்போது அரவிந்த்சாமி ரெஜினா கெசண்ட்ரா இணைவதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படத்தில் இதுவரை பார்த்திராத வேடத்தில், கெட்டப்பில் வருகிறாராம் ரெஜினா. முதலில் யோசித்தாராம். பிறகு கதையை முழுமையாக கேட்டு விட்டு ஓகே. சொன்னாராம்.


Click it and Unblock the Notifications











