அந்நியன் பட லொகேஷனில் ஆர்யா மனைவியோடு என்ன பண்றாரு பாருங்க.. ஆம்ஸ்டர்டாமின் அழகே தனி தான்!

சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா இருவரும் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஷேர் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம், சதா நடித்த அந்நியன் படத்தின் பாடல் காட்சியில் இடம்பெற்ற இடத்துக்கு இருவரும் சென்றுள்ள நிலையில், ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த வனமகன் திரைப்படத்தில் அறிமுகமாகி வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை சாயிஷா. கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவின் காப்பான், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா என அடுத்தடுத்து நடித்து வந்த சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்ததும் அவர் மீது காதல் வயப்பட்டார்.

Arya and Sayyeshaa romanced in Amsterdam Tulips garden

விஷால், சிம்பு மாதிரியே ஆர்யாவும் திருமணம் ஆகாமல் இருந்துவிடுவாரோ என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு படம் முடிந்ததும் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு குழந்தையையும் பெற்றுக் கொண்டனர்.

3 படங்களில் இணைந்து: சூர்யாவின் காப்பான் படத்திலும் ஆர்யா நடித்திருந்தார். அந்த படத்தில் சாயிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் கஜினிகாந்த் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். கடைசியாக டெடி படத்திலும் ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடி இணைந்து நடித்திருந்தனர். சாயிஷாவுக்கு அந்த படம் முழுவதும் கதாபாத்திரம் இருந்தாலும், நடிக்கும் வாய்ப்பு ஒரு கேமியோவை போலவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்குப் பிறகு குத்தாட்டம்: நடனமாடுவதில் இன்னமும் சாயிஷாவை அடித்துக் கொள்ள ஆளில்லை என சொல்லும் அளவுக்கு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை போட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். இவ்வளவு இளம் வயதில் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டாரே என பல இளைஞர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகும் சிம்பு நடித்த பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார் சாயிஷா.

அந்நியன் பட லொகேஷனில் ரொமான்ஸ்: தனது கணவர் ஆர்யாவுடன் ஆம்ஸ்டர்டாமுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நடிகை சாயிஷா. பல வருடங்களுக்கு முன்பே டூலிப்ஸ் பூக்கள் வரிசையாக பல ஏக்கருக்கு பூக்கும் அழகான காட்சிகளை அந்நியன் படத்தில் இடம்பெற்ற "குமாரி.. என் காதல் சிக்கி முக்கித் திக்குது குமாரி" என்கிற பாடலில் காட்டி ரசிகர்களின் கண்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில், அந்த இடத்துக்குச் சென்ற சாயிஷா தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்யா என்ன இப்படி இருக்காரே: நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார். அடுத்ததாக அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிக்க மீண்டும் தன்னை கட்டுமஸ்த்தாக உருவாக்கி வருகிறார். இந்நிலையில், தூரத்தில் இருந்து எடுத்த வீடியோவை சாயிஷா வெளியிட்டுள்ள நிலையில், அவருடன் இருப்பது ஆர்யா தானா? என்றும் ஆர்யா என்ன இப்படி மாறிட்டாரே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சார்பட்டா பரம்பரை நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், சார்பட்டா 2 தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X