நான் இன்னும் தனியாத்தான் இருக்கேன்… நயன்தாரா
சென்னை: ஆர்யாவுக்கும், தனக்கும் காதல் இல்லை, நாங்கள் நண்பர்களாத்தான் பழகுகிறோம் என்று கூறியுள்ளார் நயன்தாரா.
எனக்கு காதல் வந்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். இப்போதைக்கு தான் தனியாகத்தான் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு தமிழ் சினிமா உலகின் ஹாட் டாபிக் ஆர்யா, நயன்தாரா ஜோடிதான். ராஜா ராணி, ஆரம்பம் என அடுத்தடுத்து நயன்தாரா நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஒன்றில் ஜோடியாக நடித்த ஆர்யா, ஆரம்பம் படத்தில் டாப்ஸியின் ஜோடி சேர்ந்தார்.
இந்த படங்களின் வெற்றி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நயன்தாரா தன்னுடைய காதல் பற்றியும் பேசினார்.

10 வருட சினிமா வாழ்க்கை
10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். வெற்றி தோல்விகளையும் பார்த்து விட்டேன். என் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளேன்.

அஜீத்துடன்
"அஜீத்துடன் நான் நடித்துள்ள மூன்றாவது படம் ‘ஆரம்பம்'. இந்த படம் வெற்றி பெற்றுள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு
இரண்டு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தேன். ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். சினிமா துறையினரும் வரவேற்றுள்ளனர்.

நேர்மை அவசியம்
சினிமாவில் விடா முயற்சியும், நேர்மையான உழைப்பும், தன்னம்பிக்கையும், கடவுள் அருளும் இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு அது இருக்கிறது.

ஆர்யா நண்பேன்டா
ஆர்யாவுக்கும், எனக்கும் காதல் இல்லை. இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். சினிமாவை தவிர எனக்கும், ஆர்யாவுக்கும் தனித்தனி வாழ்க்கை உள்ளது. நாங்கள் நண்பர்கள்தான்.

இன்னமும் தனிதான்
நாங்கள் படங்களில் பொருத்தமான ஜோடியாக தெரிகிறோம். எனவேதான் இப்படி வதந்தி பரவுகிறது. காதல் இருந்தால் வெளிப்படையாக அறிவிப்பேன். நான் இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











