ஆர்யா என் குடும்பத்தில் ஒருவர்... அமரகாவியம் ஆடியோ ரிலிஸில் மனம் திறந்த நயன்தாரா!
சென்னை: 'நான்' பட இயக்குநரான ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் இயக்கியுள்ள 'அமரகாவியம்' படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துளார். இப்படத்தை தனது 'தி ஷோ பீப்பிள்' நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார் ஆர்யா.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, சத்யம் தியேட்டரில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகைகள் நயன்தாரா, திரிஷா, பூஜா, லேகா வாஷிங்டன், ரூபா மஞ்சரி, இயக்குநர்கள் பாலா, விஷ்ணுவர்தன், சுசீந்திரன், ராஜேஷ், கண்ணன், லிங்குசாமி, ஜனநாதன், பார்த்திபன், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், விக்ராந்த், சாந்தனு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது.
அரங்கம் முழுவதும் நட்சத்திரங்களால் நிறைந்திருந்தாலும், அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது நயன்தாரா தான். காரணம் தான் நடித்துள்ள படங்களின் விழாவில் கலந்து கொள்வதையே தவிர்த்து வருபவர் நயன். அப்படி இருக்கையில் அமரகாவியம் ஆடியோவை வெளியிட்டு நயன்தாரா அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
திரிஷாவுடன் இணைந்து அப்படத்தின் ஆடியோவை வெளியிட்ட நயன்தாரா, அதனைத் தொடர்ந்து விழாவில் பேசியதாவது :-

என் குடும்பத்தில் ஒருவர்....
பொதுவாக நான் எந்த படங்களின் ஆடியோ விழாவுக்கும் போகமாட்டேன். ஆனால் ஜாமி(ஆர்யா) எனது குடும்பத்தில் ஒருவர் என்பதால் பங்கேற்றேன்.

எல்லாரையும் பிடிக்கும்....
பொதுவாக எல்லா ஹீரோயின்களையும் ஆர்யாவுக்கு ரொம்ப பிடிக்கும், யாரையும் பிரிச்சு பார்க்கமாட்டார்.

ஆர்யாவுக்காகத் தான்...
இந்த விழாவில் நான் பங்கேற்றதே ஆர்யாவுக்காகத்தான். இந்த விழாவில் நானும் பங்கேற்றது சந்தோஷம்.

வாழ்த்துக்கள்...
அமரகாவியம் படத்தில் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











