தமிழகத்தில் ஆர்யா மட்டுமே என் தோஸ்த்: ஏமி ஜாக்சன்
சென்னை: தமிழகத்தில் ஆர்யா மட்டுமே தனது நண்பர் என இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த மாடலான ஏமி ஜாக்சன் மதராஸபட்டினம் படம் மூலம் நடிகையானார். படத்தில் அவர் ஆர்யா மீது காதல் கொண்டார். இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற ஏமி விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த படத்தில் சிம்பு கதாபாத்திரத்தில் பிரதீக் பாபர் நடித்தார்.

காதல்
ஏமிக்கும், பிரதீக் பாபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்றும், அவர்கள் ஜோடியாக வலம் வருகிறார்கள் என்றும் இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

நண்பர்கள்
ஷங்கரின் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ள ஏமிக்கு தமிழகத்தில் நண்பர்கள் யாரும் இல்லையாம்.

லண்டன்
தமிழகத்திற்கு நடிக்க வந்துவிட்டு செல்வதால் இங்கு நண்பர்கள் இல்லையாம். ஆனால் லண்டனில் ஏராளமான நண்பர்கள் உள்ளார்களாம்.

ஆர்யா
தமிழகத்தில் தனக்கு நண்பர்களே இல்லை என்று கூறும் ஏமிக்கு ஆர்யா மட்டும் தான் இங்கு நல்ல நண்பராம். அவருடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டாலும் அது குறித்து வெளிப்படையாக தெரிவிப்பதில்லையாம்.


Click it and Unblock the Notifications











