அரண்மனை 3 படத்தில் இந்த ஹீரோயினும் இருக்காராம்... பேயாக விரட்டுவாரா? கிளாமராக மிரட்டுவாரா?
சென்னை: அரண்மனை 3 படத்தில் மேலும் சில நடிகர்கள், நடிகைகள் இணைந்துள்ளனர்.
சுந்தர் சி இயக்கத்தில், வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் சுந்தர் சியும் நடித்திருந்தார். பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது. அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

பூனம் பஜ்வா, சூரி
இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் பேசப்பட்டது. இதை சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது.

ஹீரோ ஆர்யா
இந்நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடிக்க உள்ளார். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக, ராஷி கண்ணா நடிக்கிறார். இவர் தமிழில், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்தவர். இன்னும் இரண்டு ஹீரோயினும் ஒரு முன்னணி ஹீரோவும் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

விவேக், யோகிபாபு
இப்போது முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் இதில் இணைந்துள்ளார். மற்றொரு ஹீரோயினிடம் பேசி வருகின்றனர். மற்றும் விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.

காமெடி பேய்
படப்பிடிப்பு அடுத்த மாதம் அல்லது மார்ச்சில் தொடங்க உள்ளது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் பேய் படம்.

இதுபோன்ற கதை
இதில் நடிப்பது பற்றி ராஷிகண்ணா கூறும்போது, 'அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











