Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஷாலும், ஆர்யாவும் சரியான லூசுப் பசங்க.. 'அத்தாச்சி' ஷ்ரேயா ரெட்டி தரும் 'அத்தாட்சி'!!
சென்னை: நடிகர்கள் விஷாலையும், ஆர்யாவையும் சரியான லூசுப் பசங்க என செல்லமாக விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி.
திமிர் படத்தின் மூலம் ‘திமிர்' பிடித்த வில்லியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் என அடுத்தடுத்த படங்களில் தன் நடிப்புத் திறமையை நிரூபித்தவர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக உயர்ந்த நிலையில் திடீரென விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவைத் திருமணம் செய்து கொண்டு விஷாலுக்கு அண்ணி ஆகி விட்டார் ஸ்ரேயா ரெட்டி. இப்போது அண்டாவைக் காணோம் படம் மூலம் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துள்ளார் இவர்.
இந்நிலையில், ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆர்யா மற்றும் விஷாலின் திருமணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்ரேயா ரெட்டி பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

லூசுப் பசங்க...
இண்டஸ்ட்ரில யார் மெண்டல்னு கேட்டீங்கன்னா, அது விஷாலும், ஆர்யாவும் தான். ஆர்யாவும், விஷாலும் லூசுப் பசங்க.

வேற கமிட்மெண்ட் வேணாமாம்...
சினிமா தவிர வேற எந்த கமிட்மெண்ட்டும் வேணாம்னு ஜாலியா திரியிறாங்க. ரெண்டு பசங்களும் சேர்ந்து பேச ஆரம்பிச்சா, கூட இருக்கறவங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் சென்ஸ் ஆப் ஹியூமர் ஜாஸ்தி.

எப்பப்பா கல்யாணம்...
விஷால் அம்மா ஆர்யாவை எப்பப் பார்த்தாலும், ‘ஏம்பா... எப்பப்பா நீ கல்யாணம் பண்ணிக்கப் போற? நீ கல்யாணம் பண்ண பிறகு தான் என் மகன் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டே இருக்கான்'னு கேட்பாங்க.

ஒரே ஓட்டம் தான்...
அதனால விஷால் அம்மாவைப் பார்த்தாலே ஆர்யா ஓடிருவான்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.