தாறுமாறாக ஆட்டம் போட்ட ஆர்யா மனைவி.. மலைத்துப்போன ரசிகர்கள்.. குவியும் மோசமான கமெண்ட்ஸ்!

சென்னை: 27 வயதாகும் நடிகர் ஆர்யா மனைவியும் நடிகையுமான சாயிஷா நடனத்தில் தொடர்ந்து தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார். நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட "மய்யா மய்யா" டான்ஸ் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

2005ம் ஆண்டு சூர்யா நடித்த கஜினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் சாயிஷா. 2017ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான சாயிஷா தொடர்ந்து சில படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

arya sayyeshaa heroine

ரசிகர்களை விட ஆர்யாவை அவர் ரொம்பவே கவர்ந்த நிலையில், கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அரியானா எனும் மகள் இந்த தம்பதியினருக்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாயிஷா: வனமகன் படத்திலேயே சாயிஷா போட்ட டான்ஸை பார்த்து கோலிவுட் ரசிகர்கள் ஆடிப்போய் விட்டனர். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவ்வளவு க்யூட்டாக கிராமத்து பெண்ணாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார். விஜய் சேதுபதியின் ஜுங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த், சூர்யாவுடன் காப்பான் படங்களில் ஜோடி போட்டு நடித்து வந்த சாயிஷா திருமணத்துக்குப் பிறகு கணவர் ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், சிம்புவின் நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் சாயிஷா.

arya sayyeshaa heroine

ஆர்யாவுடன் திருமணம்: தமிழ் சினிமாவில் பீக் நடிகையாக மாறிக் கொண்டிருந்த நிலையில், ஆர்யாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக 2019ம் ஆண்டு ஆர்யாவை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர், பெரிதாக படங்களில் கமிட் ஆகாமல் சாயிஷா குடும்பத்தையும் குழந்தையையும் கவனித்து வந்தாலும் தொடர்ந்து அவருக்கு டான்ஸ் மீதுள்ள ஆர்வம் இன்னமும் குறையவில்லை.

arya sayyeshaa heroine

சாயிஷா குத்தாட்டம்: நடிகை சாயிஷா தொடர்ந்து நடனம் ஆடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன் நடிப்பில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "மய்யா மய்யா" பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் தாறுமாறாக குத்தாட்டம் போட்டுள்ள சாயிஷாவின் நடனத்தை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

மோசமான கமெண்ட்ஸ்: சாயிஷாவின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் சாயிஷா ராக்கட் கேமராமேன் ஷாக்கட் என கமெண்ட்டுகளை போட்டு ஃபயர் விட்டு வருகின்றனர். வழக்கம் போல சில விஷமிகள் படுமோசமான கமெண்ட்டுகளையும் அடுத்த விவகாரத்து ரெடி போன்ற கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X