ஆத்தி.. ஆர்யா மனைவி என்ன இப்படி ஆடுறாங்க.. டைட் டி - ஷர்ட்டில் இன்கேம் இன்கேம் காவாலே!

சென்னை: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற "இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே" பாடல் மூலம் தான் ராஷ்மிகா நேஷனல் கிரஷ்ஷாகவே மாறினார். அந்த பாடலுக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் அழகான நடனத்தை போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கிரஷ்ஷாக மாறியுள்ளார் ஆர்யாவின் மனைவி சாயிஷா.

தமிழ் சினிமாவில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் அறிமுகமான சாயிஷா கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் நடித்த போது மலர்ந்த காதல் காரணமாக அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.

Sayyeshaa Arya heroine

குழந்தை பிறந்த பின்னர், தற்போது மீண்டும் நடனத்தில் அதிக கவனத்தை செலுத்தி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் சாயிஷா.

கவர்ச்சி உடையில் டான்ஸ்: சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் கவர்ச்சி உடையில் சாயிஷா போட்ட குத்தாட்டம் பலரையும் ஷாக் ஆக்கியது. திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த சாயிஷா திடீரென ஐட்டம் டான்ஸராக மாறிவிட்டாரே என பலரும் பதறிப்போனார்கள். ஆனால், நடனத்தின் மீது இருந்த ஆர்வம் தான் அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவரை நடனமாட ஓகே சொல்ல வைத்தது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Sayyeshaa Arya heroine

டைட் டி- ஷர்ட்டில்: இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி கவர்ச்சி உடைகளை அணிந்துக் கொண்டு நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் சாயிஷா. இந்நிலையில், டைட் டி- ஷர்ட் அணிந்துக் கொண்டு இவர் தற்போது "இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே" பாடலுக்கு நடனமாடிய வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார். மேலும், ஏகப்பட்ட கமெண்ட்டுகள் ஆர்யாவின் மனைவியின் இந்த நடன வீடியோவுக்கு குவிந்து வருகிறது.

வர்ணிக்கும் ரசிகர்கள்: சாயிஷாவின் கவர்ச்சி நடனத்தையும் அவரது உடல் அசைவுகளையும் பார்த்த ரசிகர்கள் வர்ணிக்கும் வார்த்தைகளையும் ஜொள்ளுவிடும் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். வனமகன், கடைக்குட்டி சிங்கம், காப்பான், ஜுங்கா, கஜினிகாந்த் மற்றும் டெடி உள்ளிட்ட படங்களில் வெள்ளாவி வச்சு வெளுத்த மாதிரி நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Sayyeshaa Arya heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X