தமன்னாவுடன் ஷாருக்கான் மகன்.. நகைக்கடை திறப்பு விழாவில் ஜோடியா கொடுத்த போஸ் தீயா பரவுதே!

மும்பை: பல வருடங்கள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மேலும், அதிகமாக்கவும் வயதான பிறகு பட வாய்ப்புகளை தாண்டி பிசினஸில் ஆர்வம் செலுத்தவும் பல சினிமா பிரபலங்களும் சைடு பிசினஸை ஆரம்பித்து வருகின்றனர்.

நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தீபிகா படுகோன், ராய் லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் பல பிசினஸ்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். சில பிரபலங்கள் விளையாட்டு துறையில் முதலீடு செய்ய, சிலர் சரக்கு கம்பெனிகளை ஆரம்பித்தும் கல்லா கட்டி வருகின்றனர்.

Aryan Khan attends Tamannaah Bhatia jewellery shop photos stirs many rumours

தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், நடிகை தமன்னா நகைக்கடை ஒன்றையே மும்பையில் ஆரம்பித்து விட்டார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை பிரேக்கப் செய்த பின்னர் தொழிலில் ஆர்வம் செலுத்தி வரும் தமன்னாவுக்காக பல நடிகைகள் ஒன்று திரண்டு வந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் தமன்னாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

சமந்தா முதல் பூஜா ஹெக்டே வரை: தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா நகைக்கடையை திறந்து வைத்த நிலையில், அவருக்கு சப்போர்ட் செய்யும் விதமாக சக நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா, பூஜா ஹெக்டே, சான்யா மல்கோத்ரா உள்ளிட்ட பல நடிகைகள் திறப்பு விழாவில் பங்கேற்ற கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி ஏற்கனவே வைரலான நிலையில், அதை விட தற்போது தமன்னா ஷாருக்கான் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், இருவரும் நெருக்கமாக பேசிக் கொள்ளும் வீடியோக்களும் தீயாய் பரவி வருகின்றன.

Aryan Khan attends Tamannaah Bhatia jewellery shop photos stirs many rumours

தமன்னாவுடன் ஆர்யான் கான்: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் தமன்னாவின் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற காட்சிகள் தான் தற்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. தனுஷ் தனக்கு அண்ணன் மாதிரி என சொல்லி மிருணாள் தாகூர் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், பாலிவுட்டின் அடுத்த மலைகா அரோரா - அர்ஜுன் கபூரா? என ஏகப்பட்ட வதந்திகளையும் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

முதல் படத்திலேயே தமன்னாவுக்கு வாய்ப்பு: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக ஆர்யான் கான் இயக்கிய பேட்ஸ் ஆப் பாலிவுட் படத்தில் நடிகை தமன்னா உள்ளாடை வெளியே தெரியும் வகையில் படு கவர்ச்சியான ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார். இந்நிலையில், ஆர்யான் கான் இந்த நிகழ்ச்சிக்கும் வருகை தந்த நிலையில், ஏகப்பட்ட கிசுகிசுக்களை கிளப்பி வருகின்றனர். ஆனால், நட்பு ரீதியாகவே ஆர்யான் கான் தமன்னாவின் அழைப்பை ஏற்று நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார் என்று தான் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமன்னா தமிழில் அரண்மனை 4 படத்துக்குப் பிறகு மீண்டும் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக புருஷன் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X