சாயிஷா ராக்ட்.. ஆர்யா ஷாக்ட்.. திறமையான ஆட்டக்காரியை வீட்லயே அடக்கி வைக்கலாமா?.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை: நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா வெளியிட்டுள்ள கவர்ச்சி நடன வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. மேலும், அவரது வீடியோவுக்கு கீழ் ரசிகர்கள் பலரும் நீங்க மறுபடியும் நடிக்க வாங்க என்றும் பத்து தல படத்துக்குப் பிறகு ஐட்டம் டான்ஸ் ஏன் ஆடல என ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.
27 வயதாகும் சாயிஷா ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ஜெயம் ரவி, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருடன் நடித்து வந்தார். ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடிக்கு அரியானா எனும் பெண் குழந்தையும் இருக்கிறது. கடைசியாக சிம்புவின் பத்து தல படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். ஆனால், தொடர்ந்து நடனத்தின் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டி ஏகப்பட்ட நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
ஏ.எல். விஜய் புண்ணியத்தால்: சூர்யாவின் கஜினி படத்தில் சாலையை கடக்கும் சிறுமியாக நடித்த சாயிஷா கடந்த 2017ம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எமி ஜாக்சன், சாயிஷா என அழகான நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதையே வேலையாக கொண்டிருந்த ஏ.எல். விஜய்யின் புண்ணியத்தால் கிடைத்த சாயிஷா தொடர்ந்து சில படங்களில் நடித்து அசத்தினார்.
சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ஜோடி: கஜினி படத்தில் குழந்தையாக நடித்த சாயிஷா வளர்ந்து ஹீரோயினாக மாறிய நிலையில், சூர்யா நடித்த காப்பான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் ஹீரோயினாக நடித்த சாயிஷா ஆர்யாவுடன் கஜினிகாந்த் மற்றும் டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இளம் வயதிலேயே திருமணம்: தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரப்போகிறார் சாயிஷா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சட்டுபுட்டென ஆர்யாவை காதலித்த இவர் கடந்த 2019ம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டு அழகான பெண் குழந்தைக்கு அம்மாவாகவும் மாறிவிட்டார். அதற்கு பிறகு சினிமாவில் சாயிஷா நடிக்காமல் ஒதுங்கியிருந்தாலும் தொடர்ந்து நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சாயிஷா ராக்ட்: இந்தி பாடல் ஒன்றுக்கு கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு செம ஹாட்டாக சாயிஷா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். சாயிஷா ராக்ட் என்றும் ஆர்யா ஷாக்ட் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ரசிகர்கள் கேள்வி: நடிகர் ஆர்யா மட்டும் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், அவரது மனைவி சாயிஷா எப்படியெல்லாம் சிறப்பாக நடனமாடுகின்றார். ஆனால், அவரை ஏன் படங்களில் நடிக்கவிடுவதில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகு சமந்தா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எல்லாம் நடித்து வரும் நிலையில், சாயிஷாவும் நடிக்கலாமே என்றும் அட்லீஸ்ட் உங்க படத்துலயாவது அவங்களுக்கு சான்ஸ் கொடுங்க என்றும் சாயிஷாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சாயிஷா நடிக்க விரும்பினால் நிச்சயம் நடிப்பார். அவருக்கு நடனத்தில் தான் ஆர்வம் அதிகம் என்றும் அவரை ஆர்யா கன்ட்ரோல் பண்ணியிருந்தால் இப்படியெல்லாம் டிரெஸ் பண்ணிட்டு ஆடுவாரா என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications