ஐஸ்வர்யா ராயின் குத்தாட்டம் 'கன்பர்ம்ட்'.. ஆடுவதற்கு மேடையும் 'ரெடி'.. 26ம் தேதி 'ஷூட்'!

By Sudha

மும்பை: ஒரு வழியாக சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் குத்தாட்டத்திற்கு ஆடப் போவது யார் என்பது உறுதியாகி விட்டது.

ஐஸ்வர்யா ராயை சம்மதிக்க வைத்து விட்டாராம் பன்சாலி. டான்ஸ் ஆடுவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறதாம்.

மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா ஆகியோரைத் தாண்டி இந்த குத்தாட்டத்திற்காக ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.

2 வருட வன வாசம்

2 வருட வன வாசம்

திருமணத்திற்குப் பிறகும் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்தினார். அதன் பின்னர் கடந்த 2 வருடமாக அவர் சினிமாப் பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

மறுபடியும் வருகிறார்..இந்த முறை டான்ஸ் மட்டுமே

மறுபடியும் வருகிறார்..இந்த முறை டான்ஸ் மட்டுமே

இந்தநிலையில் 2 வருட வனவாசத்திற்குப் பின்னர் மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் இம்முறை ஐட்டம் பாட்டுக்கு ஆடப் போகிறார்.

ராம் லீலா

ராம் லீலா

சஞ்சய் லீலா பன்சாலி ராம்லீலா என்ற படத்தை இயக்குகிறார். இதில் இடம் பெறும் குத்துப் பாட்டுக்கு ஆட வைக்க யாரைத் தேர்வு செய்யலாம் என்று அவர் யோசித்தார்.

மாதுரி, பிரியங்கா

மாதுரி, பிரியங்கா

முதலில் மாதுரி தீட்சித்தை யோசித்தார். பின்னர் பிரியங்காவை ஆட விடலாமா என்று யோசித்தார். பின்னர் இருவரையும் விட்டு விட்டு ஐஸ்வர்யா ராயை அணுகினார்.

நீண்ட யோசனைக்குப் பின்னர் சம்மதம்

நீண்ட யோசனைக்குப் பின்னர் சம்மதம்

முதலில் குத்துப் பாட்டுக்கு ஆடுவதா என்றுயோசித்தாராம் ஐஸ்வர்யா. ஆனால் பன்சாலி தொடர்ந்து பேசி சமரசப்படுத்தியதால் தற்போது சம்மதம் கொடுத்து விட்டாராம் ஐஸ்வர்யா.

மேடை ரெடி

மேடை ரெடி

இந்தப் பாட்டை ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் ஸ்டூடியோவில் செட் போட்டு படமாக்குகிறார்கள். செட்டும் ரெடியாகி விட்டதாம்.

10 நாள் படப்பிடிப்பு

10 நாள் படப்பிடிப்பு

10 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறதாம். செப்டம்பர் முதல் வாரத்தில் ஷூட்டிங்கை முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் பன்சாலி.

பன்சாலியுடன் 4வது படம்

பன்சாலியுடன் 4வது படம்

ஐஸ்வர்யாவும், பன்சாலியும் இணைவது இது 4 வது படமாகும். ஏற்கனவே ஹம் தில் தே சுக்கே சனம், தேவ்தாஸ், குஸாரிஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X