»   »  ஆஹாஹா ஆஷிகா!

ஆஹாஹா ஆஷிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தித்திக்கும் சிரிப்போடு, பத்திக்க வைக்கும் அழகோடு, நடமாடும் பூப்பந்தாக இருக்கிறார் ஆஷிகா. நெஞ்சுக்குள் தீப்பந்தத்தை மறக்காமல்கொளுத்திப் போடுகிறார்.

நினைத்து நினைத்துப் பார்த்தேன் படத்தில்தான் இந்தக் கூத்து. கோலாகல கலர், கொந்தளிக்கும் இளமை, கொப்பளிக்கும் வளமையுடன்,விஜய்யின் சித்தி பையன் விக்ராந்த்துடன் ஜோடி போட்டுள்ள ஆஷிகா, தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகு வரவு.

முதல் படம் என்றாலும் கூட நிறையப் படங்களில் நடித்த அனுபவம் உடையவர் போல படு பக்காவாக நடந்து கொள்கிறாராம் ஆஷிகா. எட்டநின்று பார்த்தால் தியாவின் சாயல் தெரிகிறது, கிட்டப் போய் பார்த்தால் தீயாக இருக்கிறார்.

படத்திற்கு கவிதை போல அழகான டைட்டிலை வைத்து விட்டு நல்ல ஹீரோயினாக போடாவிட்டால் எப்படி? அதனால்தான் பார்த்து பார்த்துஆஷிகாவைத் தேர்ந்தெடுத்து விளையாட விட்டுள்ளனர்.

படத்தில் முஸ்லீம் பெண்ணாக வருகிறாராம் ஆஷிகா. இதனால் கிளாமர் சைடை பார்த்து பதவிசாக கையாண்டுள்ளனர். கும்தலக்கா கிளாமர்காட்டவில்லை என்றாலும் கூட ஆஷிகாவைத் திரையில் பார்த்தாலே இம்சையாகி விடும். அந்த அளவுக்கு படு க்யூட்டாக காட்டியிருக்கிறார்கள்.

கோலிவுட்டின் தத்தக்கா பித்தக்காக கிளாமர் டால் போல ஆஷிகா இல்லை. ஆனாலும், கம்பீர அழகு அவரிடம் குண்டக்க மண்டக்க இருக்கிறது.முதல் படம் கவிழ்த்தினாலும் கூட ஆஷிகாவின் அழகுக்கே அடுத்தடுத்து படங்கள் விழும்.

படத்தில் ஆஷிகாவுக்கு அருமையான கேரக்டராம். அதேபோல விக்ராந்த்துக்கும் சூப்பர் கேரக்டராம். கற்க கசடற என்ற படம் மூலம் அறிமுகமானவிக்ராந்த், அதற்குப் பிறகு புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. இப்போதுதான் அவரது 2வது படம் வருகிறது.

இப்படத்தின் பாடல் கேசட் விழாவின்போது விஜய் பேசுகையில், தம்பி நல்லா வரணும் என்று ஆசிர்வதித்தார்.

இந் நிகழ்ச்சியில் சந்தியா, பூர்ணிமா, தனுஷ், ஸ்னேகா, லிங்குசாமி, சேரன், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.பி.செளத்ரி, ஜீவா என பெரும் கோலிவுட்பட்டாளமே திரண்டிருந்தது.

அண்ணன் விஜய் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆஷிகாவோடு சேர்ந்து தம்பியும் துள்ளித் திமிறட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil