ஆஷிமா நர்வால் லேட்டஸ்ட் பிக்ஸ்.. சேலையில் இவ்வளவு அழகா.. ரசிக்கும் ரசிகர்கள்!
மும்பை : குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் ஆஷிமா நர்வால்.
Recommended Video
2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா குலோபல் விருதை வென்ற ஆஷிமா நர்வால். தெலுங்கு தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாடகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி ஜெஸ்ஸி, தமிழிலில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார். அந்தபடத்தில் மிகவும் இயல்பாக, அமைதியான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடத்திருப்பார். மேலும், ராஜபீமா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றன.

தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது வீட்டிலிருந்தபடியே அவர்கள் செய்யும் அன்றாட வேலைகளை வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர்.

பல நடிகைகள் கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஆஷிமா நர்வால் குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களுக்கு விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார்.

கேரளத்து சேலையிலும் விதவிதமான சேவைகளிலும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறார் ஆஷிமா நர்வால். இதனை பார்க்கும் ரசிகர்கள் சேலையில் நீ இவ்வளவு அழகா என்று நல்ல பாசிடிவ் கமெண்ட்ஸ்களையே கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அந்த வகையில், ஆஷிமா இன்ஸ்டா புகைப்படங்களை வெளியிடுவதிலும் தனக்கென ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்கிறார்.

அது என்னவென்றால் தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு கார்னர்களிலும் அவரது ஒரே மாதிரியான போட்டோவும் இரு போட்டோக்களில் இடையில் அவர் எந்த நிற உடை அணிந்து இருக்கிறாரோ அதற்கு ஏற்றவாறு அதே நிறத்தில் சில வாசகங்கள் இருக்குமாறு புகைப்படத்தை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அவர் வெளியிடும் இந்த ஸ்டைல் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கிறது. பெரும்பாலும் கிளாமரை விரும்பும் பல கதாநாயகிகளுக்கு மத்தியில் இவர் இந்த மாதிரியான குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிடுவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கூடிய விரைவில் இவர் நடித்திருக்கும் ராஜபீமா படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் ஆரவ், கே.ஸ் .ரவிக்குமார், நாசர், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஓவியா, யாஷிகா ஆனந்த் இவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











